• India
```

Fixed Deposit களுக்கு 9.5% வரை வட்டி...இப்பவே முதலீடு செஞ்சிடுங்க...!

FD With Interest Rate Up To 9.50 Percentage

By Ramesh

Published on:  2024-11-22 21:34:34  |    444

FD With Interest Rate Up To 9.50% - குறைந்த கால முதலீடு திட்டத்தில் 9.5% வரை அதிக வட்டி தரும் Fixed Depost திட்டம் பத்தி தெரிஞ்சிக்கனும்னா இந்த தொகுப்ப முழுசா படிங்க.

FD With Interest Rate Up To 9.50% - பொதுவாக மக்களுக்கு தற்போது Long Term டெபாசிட்களின் மீது பெரிதாக பரிட்சயம் இல்லை, 10 வருடம், 15 வருடம் என அவர்கள் பெரிதாக காத்து இருக்கவும் தயாராக இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கையில் வர வேண்டும் என நினைக்கிறார்கள், அதாவது 1 இலட்சம் டெபாசிட் செய்தால் அது ஒரு வருடத்திற்குள் 1,10,000 ரூபாயாக கையில் வர வேண்டும்.

என்ன தான் பல பொதுத்துறை வங்கிகளில், பல Fixed Deposit திட்டங்கள் இருந்தாலும் கூட அவர்கள் 7% கொடுப்பதே பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது, ஒரு சில தனியார் வங்கிகள் தான் 7% முதல் 8% வரை வழங்குகின்றன, அதுவும் பெரும்பாலும் 400 நாட்கள் மற்றும் 500 நாட்கள் திட்டங்களாக தான் இருக்கின்றன, வாடிக்கையாளர்கள் தற்போது அதை விட அதிக வட்டியும் குறைந்த காலமும் எதிர்பார்க்கின்றனர்.



அவர்கள் எதிர்பார்க்கும் வகையிலேயே ஒரு சிறந்த வட்டியை வழங்கும் ஒரு நிறுவனம் குறித்து பார்க்கலாம், ஒரு வருடத்திற்கு அதாவது 12 மாதத்திற்கு கிட்டதட்ட 9.5% வரை Airtel Finance வட்டி வழங்குகிறது, அதாவது ஒரு வருடத்திற்கு ஒருவர் 1 இலட்சம் Fixed Deposit மூலம் Airtel Finance யில் முதலீடு செய்தால் அவர்களுக்கு வருட முடிவில் வட்டி மட்டும் தனியாக ரூ 9,500 வரை கிடைக்கும்.

பொதுவாக எந்த வங்கிகளும் Fixed Deposit களுக்கு 9% வரை வட்டி எல்லாம் வழங்குவதில்லை, அப்படி பார்க்கும் போது ஏர்டெல் நிறுவனம் வழங்கி இருக்கும் இந்த FD திட்டம் என்பது சிறந்த திட்டம் ஆக பார்க்கப்படுகிறது, அப்புறம் என்ன சிக்கிரம் Airtel Finance Fixed Deposit யில் முதலீடு செய்து உங்கள் முதலீட்டிற்கு நல்ல இலாபத்தை பாருங்கள்.