Collateral Free Loan Amount Increased For Farmers - விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்த வித ஈடும் இல்லாத கடன் மதிப்பை உயர்த்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
Collateral Free Loan Amount Increased For Farmers - விவசாயிகள் தங்கு தடையின்றி பயிர் இடுவதற்கு ஏதுவாக பல எளிய கடன் திட்டங்களை குறைந்த வட்டி விகிதத்தில் அரசு அமல்படுத்தி இருக்கிறது, அந்த வகையில் விவசாயிகளுக்கு, அரசு சார்பில் வழங்கும் விவசாய அட்டைகள் மூலம், கூட்டுறவு வங்கிகளில் ஈடு ஏதும் இல்லாத கடன் வழங்கப்படுகிறது, பொதுவாக அத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 1.6 இலட்சம் வரை வழங்கப்பட்டு கொண்டு இருந்தது.
ஆனால் தற்போது அந்த ஈடு இல்லா கடன் தொகையின் மதிப்பில், ஒரு 40,000 ரூபாய் உயர்த்தி, ரூ 2 இலட்சம் வரை விவசாயிகளுக்கு ஈடு இல்லா கடன் வழங்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருக்கிறது, இத்திட்டத்தின் மூலம் பல எளிய விவசாயிகள் பலன் அடைய வாய்ப்புகள் அதிகம், ஒரு முறை பயிரிட்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டால் பலரும், அடுத்த முறை பயிரிட பணம் இல்லாமல் விவசாயத்தை விட்டு விடும் நிலை ஏற்படுகிறது.
இது போக பருவ நிலை மாற்றங்களால் பெரும் மழைப்பொழிவுகள் ஆங்காங்கே பெய்து வருவதால், பல விவசாயிகள் தங்கள் பயிர்களை இழந்து பெரும் வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர், இது ஒரு முறை இரு முறை அல்ல, வருடம் வருடம் நடை பெற்றுக் கொண்டு இருப்பதால் சிறு குறு விவசாயிகள் அடுத்து பயிரிடுவதற்கே யோசிக்கும் நிலை என்பது உருவாகி இருக்கிறது.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் எந்த ஈடும் இல்லாமல் வழங்கப்படும் பயிர்க்கடனுக்கான அதிகபட்ச தொகையை 1.6 இலட்சத்தில் இருந்து 2 இலட்சம் என ரிசர்வ் வங்கி உயர்த்தி இருக்கிறது, வெகு விரைவில் இதற்கான நோட்டீஸ் ரிசர்வ் வங்கிகள் மூலம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு, இந்த பயிர்க்கடன் தொகை அதிகரிப்பு கூடிய விரைவில் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்து இருக்கிறது.