இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசுயும் இணைந்து வெளியிடுகின்றன.
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய அரசுயும் இணைந்து வெளியிடுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு ரூபாய் நோட்டு தொடர்பான விவகாரங்களை கவனிக்கிறது. நாணயங்கள் பற்றிய விவகாரங்களைக் கவனிக்கும் பொறுப்பு அரசிடம் உள்ளது.
ரூபாய் நோட்டு வடிவமைப்பை மாற்றும் அதிகாரமும் ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. ஆனால், எந்த ரூபாய் நோட்டின் வடிவமைப்பை மாற்ற வேண்டும் என்றாலும் ரிசர்வ் வங்கி மத்தியக் குழுவும் மத்திய அரசும் ஒப்புதல் அளிகக வேண்டும். ஆனால், நாணயங்களின் வடிவமைப்பை மத்திய அரரே தீர்மானிக்கிறது.
ரூபாய் நோட்டுகளையும் நாணயங்களையும் விநியோகித்தல், மாற்றிக்கொடுத்தல், சேதமடைந்த நோட்டுகளை அப்புறப்படுத்துதல், ரூபாய் நோட்டுகளைச் சேமிப்பதற்கான இடத்தேவையை கண்காணித்தல், வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றையும் இந்தத் துறை கவனித்துக்கொள்கிறது.