Credit Card Uses In Tamil -கிரெடிட் கார்டை தேர்வு செய்யும்போது பல அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக அவசியம். உங்கள் செலவுகளுக்கு ஏற்ற கார்டை தேர்வு செய்வதன் மூலம் கேஷ்பேக், ரிவார்டு பாயிண்ட்கள் போன்ற பல நன்மைகளைப் பெறலாம்.
Credit Card Uses In Tamil -கிரெடிட் கார்டுகள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், சரியான கார்டை தேர்வு செய்வதில் குழப்பம் நிச்சயம் ஏற்படக்கூடும். உங்களுடைய செலவுத்திட்டம் மற்றும் நிதி தேவைகளுக்கு ஏற்ற கிரெடிட் கார்டை தேர்வு செய்வது பல நன்மைகளைத் தரும். வட்டி விகிதம் அதிகமாக இருந்தாலும், சரியான கார்டைத் தேர்ந்தெடுப்பது நிதி மேலாண்மையில் பெரிய உதவியாக இருக்கும்.
சரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி?
1. செலவுகளுக்கு ஏற்ற கார்டு
உங்கள் முக்கிய செலவுகள் எதுவோ அதன்படி கார்டுகளைத் தேர்வு செய்யுங்கள். மளிகை, பயணம், உணவு போன்றவற்றில் கேஷ்பேக் அல்லது ரிவார்டு நன்மைகள் கிடைக்கும் கார்டுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
2. சிலருக்கு கேஷ்பேக் அதிக நன்மையளிக்கலாம், மற்றவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள். உங்களுக்குத் தேவையான நன்மையை அடிப்படையாகக் கொண்டு கார்டு தேர்வு செய்யுங்கள்.
3.வருடாந்திர கட்டணங்கள்
கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் மற்றும் சேரும் கட்டணம் இருக்கும். இந்த கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்களை முன்னிலைப்படுத்தி உங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்யுங்கள்.
4.சிறப்புச் சலுகைகள்: பல கார்டுகள் ஷாப்பிங், பயணம் போன்றவைகளில் சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றன. உங்களுக்கு தேவையான சலுகைகள் என்னவோ, அதற்கு ஏற்ப கார்டுகளை எடுத்துக்கொள்வது நல்லது
5. வெல்கம் போனஸ்
ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக், வவுச்சர்கள் போன்ற வடிவில் வெல்கம் போனஸ் வழங்கும் கார்டுகளைத் தேர்வு செய்வது கூடுதல் நன்மையை தரும்.
இந்த 5 விஷயங்களை நன்றாகப் புரிந்து கொண்டு உங்களுக்கேற்ற கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது, உங்களுடைய நிதி மேலாண்மையில் சிறந்த முடிவுகளை உருவாக்கும்.