Credit Card Cash Withdrawal With Zero Interest Rate - கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கனும், வட்டி ஜீரோ சதவிகிதமா இருக்கனும் அப்படின்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்த கிரெடிட் கார்ட வாங்கலாம்.
Credit Card Cash Withdrawal With Zero Interest Rate - பொதுவாக கிரெடிட் கார்டு என்பது ஒரு கடன் அட்டை, ஒவ்வொருவருக்கும் அவர்களது சம்பள விகிதத்தை பொறுத்து ஒரு கிரெடிட் லிமிட் மற்றும் கேஷ் வித் ட்ராவல் லிமிட் கொடுக்கப்பட்டு இருக்கும், அதைப் பொறுத்து அவர்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் பல சர்வீஸ்களை பெற்றுக் கொள்ளலாம், லிமிட்டுகளை பொறுத்து பணத்தையும் ATM களில் எடுக்க முடியும்.
பொதுவாக கிரெடிட் கார்டுகள் மூலம் ஏதும் பொருளை வாங்கினாலோ, ஆன்லைன் தளத்தில் ஏதும் ஆர்டர் செய்தாலோ, ஏதேனும் சர்வீஸ்களை பயன்படுத்தினாலோ, கடனை திருப்பி செலுத்துவதற்கான காலம் வரை வட்டி விதிக்கப்படுவதில்லை, ஆனால் பணத்தை கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி ATM மூலம் Withdrawal செய்யும் போது Cash Advance Fees + Interest 2.5% To 3.5% Per Month விதிக்கப்படுகிறது,
ஆனால் IDFC First வங்கி வழங்கும் FIRST Power+ கிரெடிட் கார்டுகளின் மூலம் ஒருவர் ATM யில் பணம் எடுக்கும் போது அவருக்கு Cash Advance Fees RS 199 + GST மட்டும் செலுத்தினால் போதும், திருப்பி கட்டுவதற்கான கால அவகாசம் (Due Date) வரும் வரைக்கும் வட்டி கிடையாதாம், ஆனால் Due Date முடிந்து விட்டால் வழக்கம் போல மற்ற வங்கிகள் போல Withdrawal க்கான மாத வட்டி ஆரம்பித்து விடும்,
இது மட்டும் அல்லாது IDFC FIRST Power+ கிரெடிட் கார்டுகளை நீங்கள் பெட்ரோல் ஸ்டேசனில் பயன்படுத்தும் போது 6.5% வரை கேஷ் பேக் பெறலாம், ரூ 2500 வரையிலான பில்ஸ் மற்றும் சர்வீஸ்களுக்கு 5% வரை கேஷ் பேக் ஆபர்கள் வழங்கப்படுகிறது, ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது IDFC First வங்கி, கிரெடிட் கார்டு பயனாளர்களை தன் பக்கம் இழுத்து இருக்கிறது.