• India

ஆஹா...201 நாளுக்கு...8.75 சதவிகிதம் வரை வட்டியா...அசத்தலான FD யா இருக்கே...!

Best Short Term FD Scheme

By Ramesh

Published on:  2025-01-11 12:35:19  |    292

Best Short Term FD Scheme - சேமிப்பு என்பது வாழ்வின் முக்கிய அம்சமாக அறியப்படுகிறது, ஆனால் மக்கள் தற்போது சேமிப்பை மட்டும் எதிர்பார்க்காமல் சேமிப்பிற்கு ஏதாவது ரிட்டன்ஸ் கிடைக்குமா என எதிர்பார்க்கிறார்கள், அதுவும் நல்ல ரிட்டன்ஸை எதிர்பார்க்கிறார்கள், பொதுவான சேமிப்பு கணக்கிற்கான நார்மலான வட்டி விகிதம் போல அல்லாமல் 10 சதவிகிதத்திற்கும் நெருக்கமான வட்டியை எதிர்பார்க்கிறார்கள்.

அந்த வகையில் Unity Small Finance வங்கியானது தங்களது வங்கியில் Fixed Deposit களுக்கு அதிகபட்சமாக 9.50 சதவிகிதம் வரை வட்டியை வழங்கி வருகிறது, பொதுவாக அவர்களது வங்கியில் 181 நாள் முதல் 201 நாட்கள் வரை வாடிக்கையாளர்கள் FD போடும் பட்சத்தில், ஜெனரல் FD க்கு 8.25% வரை வட்டியும், சீனியர் சிட்டிசன்களுக்கு 8.75 சதவிகித வரையிலும் இத்திட்டத்தின் கீழ் வழங்குகிறார்கள்.



சரி வட்டி இன்னும் அதிகமாக வேண்டும் என்றால், 501 நாட்களுக்கு ஒரு திட்டம் இருக்கிறது, அத்திட்டத்தின் கீழ் ஜெனரல் FD க்கு 8.75% வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9.25% வரையிலும் வட்டி வழங்கப் படுகிறது, அதே சமயத்தில் 1001 நாட்களுக்கு நீங்கள் FD போடும் பட்சத்தில் ஜெனரல் FD க்கு 9% வரை வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 9.50% வரையிலும் வட்டி வழங்குகிறது.

சரி 1001 நாட்களுக்கு எப்படி FD போட முடியும் என்றால், 201 நாட்கள் திட்டத்தில் முதலில் சேர்ந்து 8.75% வரை வட்டி பெறுங்கள், பின்னர் அதே தொகையை எடுத்து உங்கள் வீட்டில் இருக்கும் வேறு யாரின் பெயரில் ஆவது அதே ஸ்கீமில் அதே வங்கியில் மறுபடியும் போடுங்கள், அவ்வாறாக தொடர்ந்து செய்யும் போது உங்கள் பணத்திற்கு குறுகிய காலக்கட்டத்தில் அதிக வட்டி பெற முடியும்.