Best Monthly Saving Scheme -குறைந்த அளவிலான முதலீட்டில் கூட SIP மூலம் பெரிய அளவிலான லாபத்தை உருவாக்க முடியும்.SIP திட்டத்தை பார்க்கலாம்.
Best Monthly Saving Scheme -இந்தியர்களுக்குப் பிடித்த முதலீட்டு வாய்ப்புகளில் SIP (Systematic Investment Plan) மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் பணத்தைச் சேமிப்பது மிக அவசியமான ஒன்று. எவ்வளவு ரூபாய் சம்பாதித்தாலும், சேமிப்பு இல்லையென்றால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனால், ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கையை உறுதிசெய்ய சேமிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் விரைவான முறையில் சுலபமான முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம்மில் பலரிடமும் இருந்து வருகிறது.
இந்நிலையில், சாமானிய மக்கள் பெரும்பாலும் வங்கி சேமிப்புகள், LIC அல்லது தபால் துறை திட்டங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கையில் SIP என்ற சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த எளிய வழி SIP திட்டம் ஆகும்.
மேலும், தினம் 10 ரூபாய் சேமித்து மாதம் 300 ரூபாயாக முதலீடு செய்து வந்தால், ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்வு பெற முடியும்.அதேபோல், 30 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாய் சேமிக்கக் கூடிய வாய்ப்பு SIP மூலம் நிச்சயம் கிடைக்கும். மேலும், குறைந்த முதலீட்டிலும் அதிக பலனை SIP திட்டத்தின் மூலம் பெறலாம்.