• India
```

வித்ட்ராவலுக்கு குறைந்த வட்டி வழங்கும்...டாப் 3 கிரெடிட் கார்டுகள்...!

Top 3 Low Interest Credit Cards For Withdrawals

By Ramesh

Published on:  2024-11-08 22:05:23  |    325

Top 3 Low Interest Credit Cards For Withdrawals - கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுத்தலுக்கு குறைந்த வட்டி விதிக்கும் டாப் 3 கிரெடிட் கார்டுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Top 3 Low Interest Credit Cards For Withdrawals - பொதுவாக ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் ATM யில் பணம் எடுக்கும் ஒரு வசதி இருக்கும், அது உங்களது கிரெடிட் கார்டு லிமிட்டில் 20 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் இருக்கலாம், உதாரணத்திற்கு உங்களது கிரெடிட் கார்டு லிமிட் 1,00,000 எனில் உங்களால் ATM யில் 20,000 முதல் 40,000 வரை பணம் எடுத்துக் கொள்ள முடியும், அதற்கான மாத வட்டி விகிதம் 2.5% முதல் 3.5% சதவிகிதம் வரை இருக்கலாம்.

கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் எடுத்தல் என்பது கொஞ்சம் ரிஸ்க் தான், எடுத்த அடுத்த நிமிடத்தில் இருந்தே வட்டி ஆரம்பித்து விடும், நீங்கள் சரிவர கட்டாத பட்சத்தில் வட்டி அசலை விட எகிற வாய்ப்பு அதிகம், ஆனால் ஏதாவது அவசர தேவைக்கு எடுத்தாக கட்டாயம் இருக்கும் பட்சத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம், அந்த வகையில் வித்ட்ராவலுக்கு குறைந்த வட்டி விதிக்கும் கிரெடிட் கார்டுகள் குறித்து பார்க்கலாம்.



பாங்க் ஆப் ப்ரோடா வங்கி கிரெடிட் கார்டு வித்ட்ராவலுக்கு மாதம் 1.5% முதல் 3.49% வரை வட்டி விதிக்கிறது, வருடத்திற்கு 18% முதல் 41.88% வரை வட்டி விதிக்கிறது, கிரெடிட் கார்டு வித் ட்ராவலுக்கு குறைந்த வட்டி வழங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது பாங்க் ஆப் பரோடா தான், அதற்கு அடுத்தபடியாக HDFC கிரெடிட் கார்டு வித்ட்ராவலுக்கு மாதம் 1.99% முதல் 3.5% சதவிகிதம் வரை வட்டி விதிக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகள் வித்ட்ராவலுக்கு 2.95% முதல் 3.5% வரை வட்டி விதிக்கின்றன, இதற்கு கேஸ் அட்வான்ஸ் பீஸ் என்றும் ஒரு சார்ஜ் விதிக்கப்படும், அது கிரெடிட் கார்டை பொறுத்தவரை 200 முதல் 300 ரூபாய் வரையிலும் அல்லது எடுக்கும் பணத்தில் 2.5% ஆகவும் இருக்கலாம், இதிலும் பாங்க் ஆப் பரோடா தான் குறைந்த கேஸ் அட்வான்ஸ் பீஸ் ஆக ரூ 200 மட்டும் விதிக்கிறது.