• India
```

பிக்ஸடு டெபாசிட்களுக்கு...8.55 சதவிகிதம் வரை வட்டி...எந்த வங்கி தருகிறது தெரியுமா...?

Latest FD Scheme

By Ramesh

Published on:  2025-01-20 07:51:54  |    389

Latest FD Scheme - FD எனப்படும் பிக்ஸடு டெபாசிட்களுக்கு 8.55 சதவிகிதம் வரை வட்டி வழங்கும் புதிய திட்டம் குறித்து பார்க்கலாம்.

Latest FD Scheme - பொதுவாகவே சேமிப்பு என்பது இந்த காலத்தில் மிக மிக அவசியம் ஆன ஒன்றாக இருக்கிறது, தினம் தினம் நான் பயன்படுத்துகின்ற அனைத்துமே விலை ஏறிக் கொண்டே போகிறது, இதற்கிடையில் நிச்சயம் சேமிப்பிற்கு என்று தனியாக ஒதுக்கி வைத்தல் நிச்சயம் அவசியம் ஆகிறது, ஏதாவது ஒரு அவசர காலங்களில் அந்த சேமிப்பு என்பது நம்மையும் நம் குடும்பத்தையும் பொருளாதார வீழ்ச்சிகளுக்குள் விழாமல் காத்திடும்.

வெறும் கையில் சேமிப்பது என்பது ஆகச்சிறந்த சேமிப்பாக இருக்காது, அது செலவுகளுக்கு மட்டுமே வழி வகுக்கும், உங்களிடம் ஒரு 10 இலட்சம் ஏதோ வியாபார இலாபமாகவோ, இல்லை பென்ஷன் பணமாகவோ இருக்கிறது என்றால் அதை அப்படியே கையிலேயே வைத்து இருப்பதில் என்ன பயன் இருக்க போகிறது, அதை குறைந்த காலத்திற்கு வங்கிகளில் நிலையான வைப்பு தொகையாக போட்டு வைக்கலாம்.



சரி, அப்படின்னா ஏதாவது ஒரு நல்ல வங்கி நிலையான வைப்பு தொகைக்கு (FD) இருக்கா, நல்ல வட்டி தருவாங்களா அப்படின்னு கேட்டா, ஆம் தருகிறது, ஒரு வருடத்திற்கு 8.55% வரை பந்தன் வங்கி வட்டி வழங்குகிறது, அதாவது பொது கணக்கிற்கு நிலையான வைப்பு தொகைக்கு 8.05% வரை வட்டி வழங்குகிறது, மூத்த குடிமக்களுக்கு 8.55% வரை வட்டி வழங்குகிறது.

இந்த நிலையான வைப்பு தொகைக்கான காலம் என்பது ஒரு வெறும் ஒரு வருட காலம் என்பதால், வாடிக்கையாளர்கள் இந்த நிலையான வைப்பு தொகை திட்டத்தின் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர், வைப்புத் தொகை ஒரு வருடத்தை தாண்டும் போதும் 8% முதல் 8.50% வரை இத்திட்டத்தின் கீழ் வட்டி வழங்கப்படுவது இத்திட்டத்தின் கூடுதல் அம்சம் ஆக பார்க்கப்படுகிறது.