• India
```

வீடு கட்டுவதற்கான கடன்...எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் தருகிறது தெரியுமா...?

Home Loan With Low Interest Rate

By Ramesh

Published on:  2024-12-02 15:33:27  |    169

Home Loan With Low Interest Rate - வங்கிகள் தருகின்ற வீட்டுக்கடன் என்பது, எந்த வங்கியில் குறைவான வட்டி வீதத்தில் கிடைக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

Home Loan With Low Interest Rate - பொதுவாக வீட்டுக்கடன் என்பது ஒருவருடைய சொந்த நிலத்தில் அவர் வீடு கட்ட அவருக்கு பணம் சார்ந்த உதவிகளை செய்ய வங்கிகளால் கொண்டு வரப்பட்ட ஒரு கடன் திட்டம் ஆகும், பொதுவாக வங்கிகள் வீட்டுக் கடனுக்கு 8% முதல் 12% வரை வட்டி விதிக்கின்றன, எந்தெந்த வங்கிகள் குறைவான வட்டி வீதங்கள் வீட்டுக்கடனுக்கு வழங்குகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.

முதலில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்னர் வங்கிகளில் ஒரு சில ஆவணங்கள் தேவைப்படும், முதலில் நிலத்திற்கான ஆவணம், பிளாட் அப்ரூவல், வரைபடம் இதெல்லாம் முதன்மையான ஆவணங்கள், இது அனைத்தும் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் உங்களுடைய 6 மாத வங்கி ஸ்டேட்மெண்ட், ஆதார், பான் இவைகளை கையில் எடுத்துக் கொண்டு வங்கிக்கு லோன் எடுக்க செல்லலாம்.



பொதுவாக வீட்டுக் கடனுக்கு குறைந்த வட்டி வீதம் வழங்குவது பாங்க் ஆப் மஹாராஸ்டிரா, பாங்க் ஆப் இந்தியா வங்கிகள் தான், வருடத்திற்கு 8.35% முதல், வேறு எந்த பிராசசிங் தொகையும் வாங்காமல் ஹோம் லோன் வழங்குகிறது, அதற்கு அடுத்தபடியாக யூனியன் பாங் ஆப் இந்தியா 8.35% வட்டி வீதம் முதல் ஹோம் லோன் வழங்கிகிறது, பிராசசிங் பீஸ் 0.50% எடுத்துக் கொள்கிறது.

பஞ்சாப் நேசனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா 8.40% வட்டி வீதம் முதல் ஹோம் லோன் வழங்குகிறது, பிராசசிங் தொகை எதும் வசூலிப்பதில்லை, கனரா பாங்க் 8.40% வட்டி வீதம் மற்றும் 0.50% பிராசசிங் தொகையுடன் ஹோம் லோன் வழங்குகிறது,  ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 8.50% வட்டி வீதம் மற்றும் 0.35% பிராசசிங் தொகை மற்றும் GST எடுத்துக் கொண்டு ஹோம் லோன் வழங்குகிறது.

" வீட்டுக் கடனுக்கு மிகக்குறைந்த வட்டி வீதங்கள் வழங்கும் வங்கிகள் இவைகள், கையில் சரியான ஆவணங்கள் உங்களிடம் இருக்கும் பட்சத்தில் சரியான வங்கியை தெரிவு செய்து கடனை பெற்றுக் கொள்ளலாம் "