Banks Written Off 5 Lakh Crores Of Corporate Loans - இந்தியாவில் கடந்த 5 வருடங்களில் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்ட 10 இலட்சம் கோடி கடன்களுள், 50 சதவிகித கடன்கள் கார்பரேட் கடன்கள் என அறியப்பட்டுள்ளது.
Banks Written Off 5 Lakh Crores Of Corporate Loans - இந்தியாவில் தனிநபர்கள் வாங்கும் மொத்த கடன்களை விட கார்பரேட்டுகள் அவர்களது தொழில் விரிவாக்கத்திற்காக வாங்கும் கடன் என்பது பல மடங்கு அதிகம், இதில் பல கடன்கள் திருப்பி பெற முடியாத கடன்களாக இருக்கின்றன. அதாவது வங்கிகளில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கிய 26 இந்திய பெரு நிறுவனங்களின் கடன்கள் Bad Debt வரிசையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அதன் மதிப்பு ஒரு சில இலட்சம் கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
500 முதல் 1000 கோடி வரை கடன் வாங்கிய 40 பெரு நிறுவனங்களின் கடன்கள் Bad Debt வரிசையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன, அதன் மதிப்பு ஐம்பதாயிரம் கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, 500 கோடி வரை கடன் வாங்கிய 2,300 பெரு நிறுவனங்களின் கடன்களும் Bad Debt வரிசையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன, அதன் மதிப்பும் ஒரு சில இலட்சங்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறாக பெரு நிறுவனங்களை வைத்துக் கொண்டு பெருமுதலாளிகள் வாங்கும் கடனே இந்தியாவின் மொத்த கடன்களுள் 65 சதவிகிதத்தை தாண்டுகிறது, எந்த ஒரு பெரு நிறுவனத்திடம் சென்ற கடனும் வங்கிகளால் திரும்பி பெற முடியாத நிலையில் பேட் டெப்ட் வரிசையில் தான் இருக்கிறதாம். அப்படி என்றால் ஏன் வங்கிகள் கடன் கொடுக்கிறது என விசாரித்த போது பெருவாரியான இலாபத்தில் இயங்கும் பல நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறி கடனை திருப்பி செலுத்த மறுக்கிறதாம்.
கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து கடனை திருப்பி வாங்க முடியாத வங்கிகளும் ஒரு கட்டத்திற்கு பின் அதனை வாராக் கடனாக அறிவித்து, பின்னர் தள்ளுபடியும் செய்து விடுகின்றன. இவ்வாறாக கடந்த 5 வருடத்தில் மட்டும் கார்பரேட் நிறுவனங்களின் 5 இலட்சம் கோடிகளுக்கும் அதிகமான கடன்கள் வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.