• India
  • April 7, 2025 at 09:22:02 AM
```

Personal Loan க்கு இவ்ளோ கம்மியா வட்டியா...எந்தெந்த வங்கிகள் தருதுன்னு தெரிஞ்சிக்கனுமா...?

Personal Loan With Low Interest

By Ramesh

Published on:  2024-11-23 18:20:19  |    195

Personal Loan With Low Interest - தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி வீதங்கள் வழங்குகின்ற வங்கிகள் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

Personal Loan With Low Interest - முதலாவதாக தனிநபர் கடன் என்பது ஒரு தனி நபரை மட்டும் நம்பி, வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ கொடுக்கும் ஒரு கடன் ஆகும், இதற்கு எந்த ஒரு சாட்சியங்களோ, சொத்துக்களோ அந்த நபருக்கு இருக்க வேண்டும், வங்கிகளிடம் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை, அந்த முழு கடன் தொகையும் ஒருவரை மட்டுமே நம்பி கொடுக்கப்படுகிறது.

அவர் அரசு ஊழியராகவோ அல்லது தனியார் ஊழியராகவோ இருக்கலாம், முறைப்படி வருமானம் வங்கி கணக்கில் ஏறுபவராக இருக்க வேண்டும், அவருக்கு வரும் வருமானத்தை பொறுத்து அவருக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்பதை வங்கிகளே தீர்மானிக்கும், கடனை பெற்றதும் அசல் மற்றும் வட்டி சேர்த்து மாதத்தவணையில் திருப்பி செலுத்த வேண்டி இருக்கும்.



சரி, தனிநபர் கடனுக்கு வங்கிகளில் குறைந்த வட்டி கிடைக்குமா என்றால், கொஞ்சம் கடினம் தான், ஹோம் லோன், கார் லோன் கூட, வட்டி வீதம் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக, ஏதாவது ஒரு வங்கியில் வாங்கி விட முடியும், ஆனால் பெரும்பாலும் தனி நபர் கடனுக்கான வட்டிகள் என்பது, பெரும்பாலான வங்கிகளில் கிட்ட தட்ட 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக தான் இருக்கின்றன, 

அதிலும் வட்டி குறைவாக தருகிற வங்கிகள் என்றால், பந்தன் வங்கி 9.47% முதல்,  நவி 9.90% முதல், இந்தியன் வங்கி 10% முதல், பாங்க் ஆப் பரோடா 10.60% முதல், HDFC, ICICI, BOI வங்கிகள் 10.85% முதல் வட்டி வீதம் வழங்குகின்றன, இவைகள் தான் தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி வீதம் வழங்கும் வங்கிகள், இந்த வட்டி வீதம் நீங்கள் பெறும் கடன் மற்றும் திருப்பி செலுத்தும் காலத்தை பொறுத்து மாறக்கூடும்.