Up to 7.5% Interest For Normal Savings - பொதுவாக சேமிப்பு கணக்கிற்கு 2.75% முதல் 4% வரை தான் வங்கிகள் வட்டி வழங்குகின்றன, ஆனால் 7.5% வரை ஒரு வங்கி வட்டி வழங்குகிறது, அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Up to 7.5 Percentage Interest For Normal Savings - வங்கிகளில் பொதுவாக மக்கள் இரண்டு விடயங்களுக்காக சேமிப்பு கணக்கை துவங்க நினைப்பார்கள், ஒன்று பணத்திற்கான பாதுகாப்பு, இன்னொன்று சேமிப்பிற்கான வட்டி, ஆனால் தற்போதெல்லாம் சேமிப்பிற்கான வட்டி என்பது வங்கிகளில் மிக மிக குறைவு தான், பெரும்பாலும் அது 2.5% முதல் 4% வரை தான் இருக்கிறது, அதனால் தற்போது மக்கள் வங்கிகளில் சேமிக்கவே விரும்புவதில்லை.
FD, RD என பல குறுகிய கால சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும் கூட மக்களுக்கு அதன் மீது பெரிதாக நாட்டம் இல்லை, இதனை கருத்தில் கொண்டு ஒரு சில வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கே அதிக வட்டி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றனர், அவ்வாறாக தங்களது வங்கியின் கணக்கை துவங்கும் சேமிப்பு தாரர்களுக்கு 7.5% வரை வட்டி வழங்குகிறது உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி.
உங்களிடம் ஆதார், பான் கார்டு உள்ளிட்டவைகள் இருக்கும் பட்சத்தில் ஆன்லைனிலேயே சேவிங் அக்கவுன்ட் திறக்கும் வகையில் வழிவகையும் செய்து இருக்கிறது, ATM, வங்கி பாஸ்புக் உள்ளிட்டைவைகள் தபால் அல்லது கொரியர் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள், எங்கு இருந்து கொண்டும் உங்களால் வங்கி கணக்கை திறக்கவும் முடியும், பரிவர்த்தனையும் செய்து கொள்ள முடியும்.
சரி சேமிப்பு கணக்கிற்கு வருவோம், பொதுவாக நீங்கள் சேமிக்கும் பணம் 1 இலட்சத்திற்குள் என்னும் போது 3.5% வட்டியும், 1 இலட்சம் முதல் 5 இலட்சத்திற்குள் இருக்கும் போது 5% வட்டியும், 5 இலட்சம் முதல் 25 இலட்சத்திற்குள் இருக்கும் போது 7.25% வரை வட்டியும், 25 இலட்சத்திற்கு மேல் என்னும் போது 7.50% என்ற அசத்தலான வட்டியும் தருகிறது உஜ்ஜிவன் வங்கி, அப்புறம் என்ன இப்பவே அக்கவுண்ட் ஓபன் பண்ணிடுங்க.