• India
```

Fixed Deposit களுக்கு 8.75% வரை வட்டி...எந்த வங்கி தருகிறது தெரியுமா...?

High Interest For Fixed Deposit

By Ramesh

Published on:  2024-11-09 20:57:47  |    531

High Interest For Fixed Deposit - பிக்ஸடு டெபாசிட்களுக்கு 8.75% வரை வட்டி வழங்கும் ஒரு வங்கியின் FD Scheme குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

High Interest For Fixed Deposit - பொதுவாக மக்களுக்கு தற்போது Long Term டெபாசிட்களின் மீது பெரிதாக பிரியம் இல்லை, 10 வருடம், 15 வருடம் என அவர்கள் காத்து இருக்கவும் தயாராக இல்லை, அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் 10 சதவிகிதம் கையில் வர வேண்டும் என நினைக்கிறார்கள், அதாவது 1 இலட்சம் டெபாசிட் செய்தால் அது ஒரு வருடத்திற்குள் 1,10,000 ரூபாயாக கையில் வர வேண்டும்.

என்ன தான் பல பொதுத்துறை வங்கிகள் பிக்ஸடு டெபாசிட் ஸ்கீம் வைத்து இருந்தாலும் கூட அவர்கள் 7% கொடுப்பதே பெரிய விடயமாக பார்க்கப்படுகிறது, ஒரு சில தனியார் வங்கிகள் தான் 7% முதல் 8% வரை வழங்குகின்றன, அதுவும் பெரும்பாலும் 400 நாட்கள் மற்றும் 500 நாட்கள் திட்டங்களாக தான் இருக்கின்றன, வாடிக்கையாளர்கள் தற்போது அதை விட அதிக வட்டியும் குறைந்த காலமும் எதிர்பார்க்கின்றனர்.



அவ்வாறாக வாடிக்கையாளர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கி ஆனது சம்பூர்னா நிதி, பிளாட்டினா FD என்ற இரண்டு FD ஸ்கீம்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது, சம்பூர்னா நிதி என்பது ஒரு வருடத்திற்கான FD க்கு 8.25% வரை வட்டி வழங்குகிறது, சீனியர் சிட்டிசன்களுக்கு ஒரு வருடத்திற்கான ஸ்கீமில் கூடுதலாக 0.50% சேர்த்து 8.75% வரை வட்டி வழங்குகிறது.

அதே சமயத்தில் பிளாட்டினா FD என்ற ஸ்கீமில் அதிகபட்சமாக 8.45% வரை வட்டி வழங்கப்படுகிறது, இத்திட்டத்தின் கீழ் 1 கோடி முதல் 3 கோடி வரை டெபாசிட் செய்ய இயலும், 12 முதல் 60 மாதங்கள் வரை FD கான காலத்தை செலக்ட் செய்து கொள்ளலாம், ஆனால் பிளாட்டினா FD யில் கோடிகளில் தான் டெபாசிட் செய்ய இயலும், அதே சமயத்தில் சம்பூர்னா திட்டத்தில் ஆயிரத்தின் மடங்குகளாக சேமிக்கலாம்.