• India
```

சேமிப்புக் கணக்குகளில் வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்கள்..!!2.70% முதல் 4% வரை..?

Bank Minimum Balance | Business News in Tamil

Bank Minimum Balance -ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. இது உங்கள் நிதிகளை நிர்வகிப்பதில் பல பயன்களை வழங்குகிறது.

Bank Minimum Balance -ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. இது உங்கள் நிதிகளை நிர்வகிப்பதில் பல பயன்களை வழங்குகிறது. பணத்தைச் சேமிப்பதும், மீண்டும் எடுத்துக்கொள்ளுவதும் மிகவும் எளிதாக இருக்கும். இதனால், பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வங்கி சம்பந்தமான வேலைகளை இதன் மூலம் மேற்கொள்கின்றனர்.

நாட்டில் ஆன்லைன் கட்டணங்கள் மற்றும் UPI வசதி அறிமுகம் ஆன பிறகு, அதன் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், சேமிப்புக் கணக்குகளுக்கு வருமான வரித்துறையால் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதைக் உங்களுக்குத் தெரியுமா?

நீங்கள் எந்தவொரு வங்கியிலும் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைச் சேமிக்கவும், எடுக்கவும் முடியும். இது தவிர, வங்கியுடன் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால், இதற்கான சில வரம்புகளும் உள்ளன. சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்பதைக் பார்க்கலாம். 


பல்வேறு வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுடன் பலவிதமான வசதிகளை வழங்குகின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கிச் சேவைகளை சேமிப்புக் கணக்குகள் மூலம் மட்டுமே நடத்துகிறார்கள். அதற்கிடையில், பெரும்பாலான வங்கிகள் சேமிப்புக் கணக்கில் அதிகபட்சமாக எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்பதற்கான எவ்வித வரம்பையும் விதிக்கவில்லை.

சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்திற்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்தால், இதைப் வருமான வரித் துறைக்கு அறிவிக்க வேண்டும். நிலையான வைப்பு, பரஸ்பர நிதி, பத்திரங்கள் மற்றும் பங்குகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கும் இதே விதிகள் செலுத்தப்படும். நடப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபாசிட் செய்யக்கூடிய வரம்பு ரூ.50 லட்சம்.

நாட்டின் முக்கிய பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் சேமிப்புக் கணக்குகளுக்கு 2.70% முதல் 4% வரை வட்டியை வழங்குகின்றன. நாட்டில் மொத்தம் 10 கோடியிற்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.