2000 Rupees Note News In Tamil -ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, ரூ.2,000 நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடம் எப்படி புழக்கத்தில் உள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன.
2000 Rupees Note News In Tamil -ரிசர்வ் வங்கி சமீபத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி, பொதுமக்களின் கைவசம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளின் நிலையைப் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே 19 அன்று, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி, அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க நேரம் வழங்கப்பட்டது.
சமீபத்திய தகவலின் படி, தற்போது ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே இன்னும் மக்களின் புழக்கத்தில் இருக்கிறது.என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
ரூ.2,000 நோட்டுகள், 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், 2023 மே 19ஆம் தேதி, ரிசர்வ் வங்கி அவற்றை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இந்நிலையில்,அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது.ஜூலை 1, 2023 அன்று, 97.87% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.அதற்கான மதிப்பு ரூ.7,581 கோடி ஆகும்.
ஆகஸ்ட் 30, 2023 வரை, பொதுமக்களிடம் ரூ .7,261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மீதம் உள்ளன.இதன் மூலம், மொத்தத்தில் 97.96% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.