How To Apply Pan Card Online In Tamil - அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் 2 மணி நேரத்தில் டிஜிட்டல் பான் கார்டைப் சுலபமாக பெற முடியும்! விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிதானது.
How To Apply Pan Card Online In Tamil - இனி, நீங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் 2 மணி நேரத்தில் டிஜிட்டல் பான் கார்டைப் சுலபமாக பெற முடியும்! விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிதானது. இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணங்களாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருக்கிறது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களின் பெயரில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதற்கும் பான் கார்டு தேவையானதாக இருந்து வருகிறது.
பான் கார்டின் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து பரிமாணங்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலையில், நீங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் 2 மணி நேரத்தில் டிஜிட்டல் பான் கார்டைப் பெறலாம். இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
PAN கார்டு பெறுவதற்கான தேவையான ஆவணங்கள்:
1. ஆதார் கார்டு மற்றும் அதற்குப் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர்.
2. வாக்காளர் அடையாள அட்டை, மின்சாரம், குடிநீர், கேஸ் பில்கள், ஓட்டுநர் உரிமம், அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ்.
சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் பான் கார்டைப் பெறுவது எப்படி? எளிமையான முறையில் பான் கார்ட் பெறுவது எப்படி என்று கீழ் வருமாறு பார்ப்போம்.
முறை 1: PAN சேவை முகவராக அங்கீகரிக்கப்பட்ட அருகிலுள்ள சில்லறை விற்பனைக் கடையைத் தேடவும். PayNearby, கிரானா ஸ்டோர்கள், மொபைல் ரீசார்ஜ் அவுட்லெட்டுகள், மருந்து கடைகள் போன்றவைகளில் இப்பணி மேற்கொள்ளலாம்.
முறை 2 : புதிய பான் கார்டு அல்லது ஏற்கனவே உள்ள பான் கார்டை புதுப்பிக்க வேண்டும் என முடிவெடுங்கள். இதை கடை ஊழியர்களிடம் தெரிவிக்கவும்.
முறை 3 : OTP சரிபார்ப்புக்காக உங்கள் மொபைல் நம்பரை கொடுக்கவும்.
முறை 4 : விண்ணப்பத்தைப் பெற்று, பெயர், ஆதார் நம்பர், மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
முறை 5 : பிறகு, eKYC முறையில் பான் கார்டு விண்ணப்ப செயல்முறையை அல்லது ஆவணங்களை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கிறீர்களா என்பதில் தேர்வு செய்யவும்.
முறை 6 :அதன் பிறகு, பான் கார்டுக்கான கட்டணம் ₹107 அல்லது டிஜிட்டல் பான் கார்டுக்கான கட்டணம் ₹72. இந்த கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.
முறை 7 : பிறகு, கட்டணத்தைச் செலுத்தி, e-KYC செயல்முறையை முடிக்கவும். ஆவணத்தில் டிஜிட்டல் கையொப்பமிட்டு OTP மூலம் சரிபார்த்து, உங்கள் விண்ணப்பத்தின் நிலையைப் பார்வையிடவும்.
இந்த, 7 முறைகளை பயன்படுத்தி எளிமையான முறையில் விரைவாக பான் கார்டு பெற்றுக்கொள்ளலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2