• India
```

5 லட்சம் கடனுக்கு குறைவான EMI..Personal Loan-ல் இழப்பா? FD Loan-ல் நன்மையா?

 5 Lakh Personal Loan EMI | FD Loan Interest Rate

5 Lakh Personal Loan EMI -Personal Loan மற்றும் Fixed Deposit (FD) Loan வட்டி விகிதங்களில் எது குறைவான EMI வழங்குகிறது என்பதைக் காணலாம்.

பர்சனல் லோன் (Personal Loan) மற்றும் Fixed Deposit (FD) அடமானத்திற்கு எதிராகக் கிடைக்கும் கடனில், எது குறைவான EMI (Equated Monthly Installment) வழங்குகிறது என்பதை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

பெரும்பாலான வங்கிகளில் Personal Loan வட்டி விகிதம் 12% முதல் 25% வரை இருக்கும். இது குறைவான லோனாக இல்லாமல், அதிக வட்டி விகிதத்துடன் வருகிறது. FD Loan-ல், உங்கள் Fixed Deposit-ஐ அடமானமாக வைத்து, அதில் இருந்து 90-95% வரை கடன் பெறலாம். FD Loan வட்டி விகிதம், FDக்கு கிடைக்கும் வட்டிக்கு கூடுதலாக 1% முதல் 2% வரை மட்டுமே இருக்கும்.


உதாரணமாக, SBI வங்கியில் 5-வருட FDக்கு 6.50% வட்டி கிடைக்கிறது. அதே FD-க்கு எதிராகக் கடன் வாங்கினால், 7.50% முதல் 8.50% வரை வட்டி வசூலிக்கப்படும். Personal Loan-களை விட இது குறைவான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது, மேலும் Processing Fee கிடையாது.


SBI வங்கியில் Personal Loan-க்கு 11.15% முதல் 15.30% வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. 5-வருடக் காலத்திற்கு ரூ.5 லட்சம் Personal Loan-க்கு, EMI ரூ.10,909 முதல் ரூ.11,974 வரை இருக்கும். மேலும், 1.50% வரை கட்டணமும் (Processing Fee) வசூலிக்கப்படும்.

இதே தொகையை FD Loan மூலம் 8% வட்டியில் வாங்கினால், 5 வருடத்திற்கு EMI ரூ.10,258 ஆக இருக்கும். Personal Loan-க்குப் பதிலாக FD Loan எடுப்பது சிறந்த நிதி தீர்வாக இருக்கும். Personal Loan-க்குப் பதிலாக FD Loan குறைவான EMIயுடன் வந்ததால், குறைந்த வட்டி விகிதத்தில் FD Loan எடுப்பது புத்திசாலித்தனமான தீர்வாக இருக்கும்.