SBI Named Best Bank in India for 2024 - அன்றைய காலக்கட்டத்தில் கிட்டதட்ட 1806 யில் பாங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில், இன்றைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கல்கத்தாவில் மட்டும் செயல்பட்டு வந்தது, அன்று இன்றைய வளர்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு, இந்தியாவில் இருந்தது ஒரே ஒரு கிளை மட்டும் தான், அதற்கு பின்னர் 1840 யில் உருவான பாங்க் ஆப் பாம்பே, 1843 யில் உருவான பாங்க் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட வங்கிகளுடன், பாங்க் ஆப் கல்கத்தா இணைந்து ஒரு கூட்டு பங்கு தாரராக செயல்பட்டு வந்தது.பின்னர் 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பாங்க் ஆப் கல்கத்தா, பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் என மூன்றும் இணைக்கப்பட்டு இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா என்றதொரு அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது, ஆங்கிலேயர்கள் அந்த வங்கிக்கு பணத்தை மறு சுழற்சி செய்யவும், அச்சடிக்கவும் உரிமை கொடுத்தனர். ஜூலை 1, 1955 அன்று இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா ரிசர்வ் வங்கியின் கட்டுபாட்டிற்குள் வந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என பெயரிடப்பட்டது.
State Bank Of India History Tamil - 1806 யில் பாங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில் கல்கத்தாவில் மட்டும் செயல்பட்டு வந்தது, அன்று இன்றைய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு இருந்தது ஒரே ஒரு கிளை மட்டும் தான், அதற்கு பின்னர் 1840 யில் உருவான பாங்க் ஆப் பாம்பே, 1843 யில் உருவான பாங்க் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து ஒரு கூட்டு பங்கு தாரராக செயல்பட்டு வந்தது.பின்னர் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் பாங்க் ஆப் கல்கத்தா, பாங்க் ஆப் பாம்பே, பாங்க் ஆப் மெட்ராஸ் என மூன்றும் இணைக்கப்பட்டு இம்பெரியல் பாங்க் ஆப் இந்தியா என்றதொரு அமைப்பு 1921 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது, ஆங்கிலேயர்கள் அந்த வங்கிக்கு பணத்தை மறு சுழற்சி செய்யவும், அச்சடிக்கவும் உரிமை கொடுத்தனர்.
Pradhan Mantri Rozgar Yojana Details In Tamil - சொந்த தொழிலை துவங்க நினைக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவி புரியும் வகையில் சிறு குறு வணிகத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் வரையிலும், உற்பத்தி மற்றும் தொழில் துறை நிறுவனங்களுக்கு ரூபாய் 5 இலட்சம் வரையிலும் கடனுதவி வழங்கும் பிரதமமந்திரி ரோஜ்கர் யோஜனா என்ற திட்டம் ஒன்றிய அரசின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது செயலில் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் லோன் பெற தகுதி1) இத்திட்டத்தின் கீழ் இணைய குறைந்த பட்சம் நீங்கள் 3 வருடம் ஒரே இருப்பிடத்தின் வசித்திருக்க வேண்டும், இல்லையேல் நிரந்தர வசிப்பிட சான்றிதழ் வாங்க வேண்டி வரும்,2) குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும்,3) வேறு எங்கும் லோன் எடுத்து இருக்கும் பட்சத்தில் அது சரியாக கட்டப்பட்டு இருக்க வேண்டும்,4) மாத குடும்ப வருமானம் 40,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
New Fixed Deposit Scheme With High Interest -பொதுவாக வங்கிகள் வெளியிடும் நீண்ட நாள் டெபாசிட் பிளான்களை விட, ஷார்ட் டர்ம் டெபாசிட் பிளான்கள் தான் வாடிக்கையாளர்களை வெகுவாக கவருகிறது, அந்த வகையில் பல வங்கிகளும் ஷார்ட் டர்ம் டெபாசிட்களுக்கு பல அதிரடியான வட்டி வீதங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகின்றன. பதிலுக்கு TMB வங்கியும் தற்போது அந்த போட்டி களத்தில் இறங்கி இருக்கிறது.இதற்கு முன்னதாக TMB 400 என்ற பெயரில் ஒரு பிக்சடு டெபாசிட் ஸ்கீம் ஒன்றை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி செயல்படுத்தி வந்தது, அத்திட்டத்தின் மூலம் இணையும் மூத்த குடிமக்களுக்கு, பிக்சடு டெபாசிட்களில் போடப்படும் பணத்திற்கு 8 சதவிகிதம் வரை வட்டி வழங்கி வந்தது, மூத்த குடிமக்கள் அல்லாதோருக்கு 7.5 சதவிகிதம் வரை வட்டி வழங்கி வந்தது.
SBI YONO Instant Loan In Just 2 Mints - இதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எஸ்பிஐ வங்கியில் வரவு செலவு வைத்து இருக்க வேண்டும், சிபில் பாதிக்கும் வகையில் எந்த ஒரு வங்கி செயலிலும் ஈடுபட்டு இருக்க கூடாது, சரியான வகையில் முந்தைய லோன்களை முடித்து இருக்க வேண்டும், இந்த மூன்றும் சரியாக இருக்கும் பட்சத்தில் YONO செயலிகளே உங்களுக்கு பேனர்கள் மூலம் Pre Approved Loanகளை வழங்குகின்றன, உங்களுக்கு Pre Approved Loanகள் பேனர் விளம்பரங்களாக காண்பிக்கும் பட்சத்தில் நீங்கள் லோனுக்கு தகுதியானவர்.ஒரு சிலருக்கு Pre Approved Personal Loan, Pre Approved Car Loans, Pre Approved Bike Loans உள்ளிட்டவைகளும் YONO செயலிக்குள் நுழைந்ததும், முன் பக்கத்திலேயே பேனர்களின் மூலம் காண்பிக்கப்படுகின்றன, அந்த செயலியில் அவ்வாறான விளம்பரங்கள் பேனர்கள் மூலம் உங்களுக்கு வருகின்ற பட்சத்தில் நீங்கள் அந்த லோனுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவீர்கள், YONO செயலி மூலம் எடுக்கப்படும் எந்த Instant லோனுக்கும் எந்த ஆவணங்களும் தேவையில்லை, காத்திருப்பு நேரமும் அதிகபட்சம் 10 நிமிடங்கள் தான்.
Banks Written Off 5 Lakh Crores Of Corporate Loans - இந்தியாவில் தனிநபர்கள் வாங்கும் மொத்த கடன்களை விட கார்பரேட்டுகள் அவர்களது தொழில் விரிவாக்கத்திற்காக வாங்கும் கடன் என்பது பல மடங்கு அதிகம், இதில் பல கடன்கள் திருப்பி பெற முடியாத கடன்களாக இருக்கின்றன. அதாவது வங்கிகளில் ஆயிரம் கோடிகளுக்கு மேல் கடன் வாங்கிய 26 இந்திய பெரு நிறுவனங்களின் கடன்கள் Bad Debt வரிசையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன. அதன் மதிப்பு ஒரு சில இலட்சம் கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.500 முதல் 1000 கோடி வரை கடன் வாங்கிய 40 பெரு நிறுவனங்களின் கடன்கள் Bad Debt வரிசையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன, அதன் மதிப்பு ஐம்பதாயிரம் கோடிகளை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, 500 கோடி வரை கடன் வாங்கிய 2,300 பெரு நிறுவனங்களின் கடன்களும் Bad Debt வரிசையில் இணைக்கப்பட்டு இருக்கின்றன, அதன் மதிப்பும் ஒரு சில இலட்சங்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
RBI Ban Four Financial Firms - கடன் விடயங்கள், வட்டி விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் சட்டவிதிமுறைகள் உள்ளிட்டவைகளை மீறியதாக கூறி ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முக்கிய நான்கு நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை விதிக்கப்பட்டு இருக்கிறது. இனி அந்த நிறுவனங்கள் எந்த ஒரு வாடிக்கையாளர்களுக்கும் புதிய லோன் ஏதும் கொடுக்க முடியாது, புதியதாக லோன் ஏதையும் பரிசீலனை செய்ய முடியாது.சரி, அந்த நான்கு நிதி நிறுவனங்கள் என்ன என்ன?1) மணப்புரம் நிதி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ்2) ஆவிஸ்கார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரோஹன் பைனான்சியல் சர்வீஸ்3) DMI குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் DMI பைனான்ஸ்4) நவி குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவி பின்சர்வ்
Interest Less Loan For Men Self Help Group - இத்திட்டத்தின் மூலம் ஆண்கள் ஒரு 10 பேர் கொண்ட சுய உதவிக் குழுவிற்கு வேளாண் கூட்டுறவு வங்கி ஆளுக்கு 50,000 முதல் 1,00,000 ரூபாய் வரை, மொத்தமாக 5 இலட்சம் முதல் 10 இலட்சங்கள் வரை வட்டி இல்லாக் கடனை வழங்குகிறது, இத்திட்டம் தென் தமிழகத்தில் பல வேளாண் பின்புலங்கள் கொண்ட ஆண்களால், சுய உதவிக் குழுக்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் இணைய என்ன செய்ய வேண்டும்?1) முதலில் 10 பேர் கொண்ட ஆண்கள் குழுவை உருவாக்கி அதற்கு ஒரு பெயர் சூட்ட வேண்டும்.2) பின்னர் 10 பேரும் உங்கள் ஊரில் இருக்கும் வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ 500 கட்டி ஒரு சேமிப்பு கணக்கு, பின்னர் மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரு ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்.3) பின்னர் குழுவின் பெயரில், வேளாண் கூட்டுறவு வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும்.4) மொத்தம் தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் இரண்டு சேமிப்பு கணக்குகள் மற்றும் குழுவிற்காக ஒரு சேமிப்பு கணக்கு இவ்வளவும் செய்ய வேண்டும்.5) குழு அமைத்து, சேமிப்பு கணக்கு எல்லாம் துவங்கிய ஒரிரு நாட்களில் உங்களுக்கு குழுவிற்கு தேவையான லோன் மதிப்பு வங்கியால் பரிசீலிக்கப்படும்.
Kooturavu App Loan Details Tamil - பொது மக்களை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஒரிரு வருடங்களாக கூட்டுறவு வங்கிகள் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்த நிலையில், தற்போது செயலிகள் மூலம் லோன் பெறும் புதிய வசதி ஒன்றையும் அறிமுப்படுத்தப்பட்டு இருக்கிறதாம், தற்போதைக்கு இத்திட்டத்திற்காக ஒரு இலட்சம் கோடி வரை ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்.சரி, எவ்வளவு கடன்கள் கிடைக்கும்?1) தனி நபர் கடன் 15 இலட்சங்கள் வரை, 9.5 சதவிகித வட்டியுடன், 10 வருடங்களில் முடிக்கும் வகையில்,2) வீட்டுக் கடன் 75 இலட்சங்கள் வரை, 8.5 சதவிகித வட்டியுடன், 20 வருடங்களில் முடிக்கும் வகையில்.3) நகைக்கடனுக்கு 20 இலட்சங்கள் வரை, 9.5 சதவிகித வட்டி, 1 வருட காலம்.4) சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு 20 இலட்சங்கள் வரை, 10 சதவிகித வட்டி, 10 வருடங்களில் முடிக்கும் வகையில்.5) பெண் தொழில் முனைவோர்களுக்கு 10 இலட்சங்கள் வரை, 10 சதவிகித வட்டி, 10 வருடங்களில் முடிக்கும் வகையில்.6) பயிர்க்கடனுக்கு 3 இலட்சங்கள் வரை வட்டியில்லா கடன், 12 முதல் 15 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில், அதற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டால் 7.5 சதவிகிதம் வட்டி.7) பயிர்க்கடனுக்கு 3 இலட்சங்களுக்கு மேலும் தேவைப்பட்டால், 7.5 சதவிகிதம் வட்டி
TMB Mandate Cheque For All Transactions - பொதுத்துறை வங்கிகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவதால், மக்கள் அவ்வப்போது தங்களது பணப்பரிமாற்றத்திற்கும், டெபாசிட்களுக்கும் தனியார் வங்கிகளை அணுகுவது உண்டு, அந்த வகையில் தூத்துக்குடியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி என்ற தனியார் வங்கி தமிழகத்தில் பல மக்களின், நிறுவனர்களின், வியாபாரிகளின் நம்பகத்தன்மையை பெற்று இருக்கிறது.ஆனால் தற்போதெல்லாம் அந்த வங்கிகளுக்குள் செல்லும் போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை பார்க்க முடிகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் அனைவரும் செக் (காசோலை) வாங்கி வைத்திருக்க வேண்டுமாம், அவ்வாறாக இல்லையெனில் இனி எந்த ஒரு பணபரிமாற்றமும் செய்ய இயலாது என்பது தான் அந்த அறிவிப்பு, இந்த அறிவிப்பு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை பயன்படுத்தி வரும் பல வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Fixed Deposit In Cooperative Banks - பொதுவாகவே சேமிப்பு என்பது தற்காலங்களில் மிக மிக அவசியம் ஆன ஒன்றாக இருக்கிறது, தினம் தினம் நான் பயன்படுத்துகின்ற அனைத்துயும் விலை ஏறிக் கொண்டே போகிறது, இதற்கிடையில் நிச்சயம் சேமிப்பிற்கு என்று தனியாக ஒதுக்கி வைத்தல் நிச்சயம் அவசியம் ஆகிறது, ஏதாவது ஒரு அவசர காலங்களில் அந்த சேமிப்பு என்பது நம்மையும் நம் குடும்பத்தையும் பொருளாதார வீழ்ச்சிகளுக்குள் விழாமல் காத்திடும்.எப்படி சேமிப்பது? வெறும் கையில் சேமிப்பது என்பது ஆகச்சிறந்த சேமிப்பாக இருக்காது, உங்களிடம் ஒரு 10 இலட்சம் ஏதோ வியாபார இலாபமாகவோ, இல்லை பென்ஷன் பணமாகவோ இருக்கிறது என்றால் அதை அப்படியே கையிலேயே வைத்து இருப்பதில் என்ன பிரஜோனம் இருக்க போகிறது, குறைந்த காலத்திற்கு பிக்சடு டெபாசிட்களில் போட்டு வைக்கலாம். உங்கள் செலவுக்கு தேவைப்பட்டால் வட்டியை மட்டும் மாதத்திற்கு ஒருமுறையோ வருடத்திற்கு ஒருமுறையோ எடுத்துக் கொள்ளலாம்.
சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் வழங்கும் ஃபிக்சட் டெபாசிட்டுகள், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் சலுகைகளால் புகழ் பெற்ற முதலீட்டு ஆப்ஷனாக இருக்கின்றன.மேலும், இந்த டெபாசிடுகள் 7 நாட்களிலிருந்து 10 வருடங்கள் வரை கால அளவைக் கொண்டுள்ளன.இது முன்கூட்டியே வித்ட்ரா செய்வதற்கான ஆப்ஷன்கள் மற்றும் வரி சேமிப்பு பலன்களும் இருக்கின்றன.இந்தியாவில் பல முன்னணி வங்கிகள் வழங்கும் சமீபத்திய வட்டி விகிதங்கள் பற்றி தெளிவாக பார்க்கலாம்,1.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: 444 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.2.HDFC வங்கி: 4 வருடங்கள் மற்றும் 7 மாதங்களுக்கு 7.9% வட்டி வழங்குகிறது.3.ஆக்சிஸ் வங்கி: 5 முதல் 10 வருடங்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.4.பஞ்சாப் நேஷனல் வங்கி: 400 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.5.பேங்க் ஆஃப் இந்தியா: 666 நாட்களுக்கு 7.8% வட்டி வழங்குகிறது.6.ICICI வங்கி:15 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கு 7.8% வட்டி வழங்குகிறது.7.கனரா வங்கி: 444 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.8.பேங்க் ஆஃப் பரோடா: 399 நாட்களுக்கு 7.75% வட்டி வழங்குகிறது.
முதலில் நீட்ஸ் (NEEDS) திட்டம் என்பது என்ன?NEEDS - New Entrepreneur cum Enterprise Development Scheme, அதாவது புது தொழில் முனைவோர்களுக்கான தொழில் துவங்க உதவும் ஒரு திட்டம், இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் முனைவோர்களுக்கு, தமிழக அரசு 10 இலட்சம் முதல் 5 கோடி வரை, 25 சதவிகிதம் அல்லது 75 இலட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கும். இத்திட்டம் 2012 முதலே இருந்தாலும் கூட தற்போது பல மாறுதல்களுடன் புதுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது.இத்திட்டத்திற்கான தகுதிகள்!1) குறைந்த பட்சம் தொழில் முனைவோர் 12 ஆம் வகுப்பு படித்து இருக்க வேண்டும்.2) வயது 21 முதல் 45 வரையினுள் இருக்க வேண்டும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 10 வயது தளர்வுடன் 55 வயது வரை இருக்கலாம்.3) குறைந்த பட்சம் தமிழகத்தில் 3 வருடம் இருந்ததற்கான ஈருப்பிட சான்று அவசியம்.4) தொழிலுக்கான நல்ல ஐடியா என்பது மிக மிக அவசியம்.5) வருமானம் குறித்து எல்லாம் கவலைப்பட தேவையில்லை, யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தின் கீழ் சேரலாம்.
பிக்ஸடு டெபாசிட் என்றால் முதலில் என்ன?பிக்ஸடு டெபாசிட் என்பது, வங்கிகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சாதாரண வட்டி விகிதத்தை விட, கொஞ்சம் அதிக வட்டி விகிதம் வழங்கி வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் ஒரு சேவிங் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒவ்வொரு வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. குறைந்த பட்சம் 3 சதவிகிதம் முதல் அதிகபட்சம் 9 ச்தவிகிதம் வரை வங்கிகளும் பைனான்ஸ் நிறுவனங்களும் இத்திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் வழங்குகின்றன.சரி, எந்தெந்த வங்கிகள் பிக்ஸடு டெபாசிட்களுக்கு எவ்வளவி வட்டிகள் வழங்குகின்றன?தனியார் வங்கிகளுள் பந்தன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 8.05 சதவிகிதம் வரையில் பிக்ஸடு டெபாசிட்களுக்கு வட்டிகளை வழங்குகிறது, பொதுத்துறை வங்கிகளை எடுத்துக் கொண்டால் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு 7.1 சதவிகிதம் வரையில், பிக்ஸடு டெபாசிட்களுக்கு வட்டிகளை வழங்குகிறது, ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளை எடுத்துக் கொண்டால் ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியும், உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு 8.25 சதவிகிதம் வரை வட்டிகளை வழங்குகிறது.
2020 -க்கு முன்னதான வரையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லை என்றால் அபராதத் தொகை பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் 2020 யில் குறைந்த பட்ச இருப்பு தொகைக்கான அபராதத் தொகை என்பது முற்றிலும் அதிகாரப்பூர்வமாஜ நீக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரு சில இணையவாசிகளோ, சுமார் 5 வருடங்களுக்கு முன்பு எஸ்பிஐ யின் பிடித்தம் குறித்து எழுதப்பட்ட ஆர்ட்டிக்கிளை இன்னும் பார்வர்டு செய்து கொண்டு இருக்கின்றனர்.
பொதுவாக கடன் என்றாலே வங்கிகள் இழுத்து அடிப்பது வாடிக்கை தான், அது போக அரசுத் திட்டங்களின் கீழ் வருகின்ற கடன்கள் என்றால் வங்கியே சரணாகதி என்று இருந்தால் கூட கடன் கிடைப்பது என்பது மிக மிக அரிது தான், அந்த வகையில் எல்லா விதமான ஆவணங்கள் இருந்தும் கூட, தொழில் முனைவோர்களுக்கான முத்ரா கடனை வழங்குவதற்கு, பல வங்கிகள் இழுத்தடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
பர்சனல் லோன் (Personal Loan) மற்றும் Fixed Deposit (FD) அடமானத்திற்கு எதிராகக் கிடைக்கும் கடனில், எது குறைவான EMI (Equated Monthly Installment) வழங்குகிறது என்பதை இங்கு விளக்கமாக பார்க்கலாம்.பெரும்பாலான வங்கிகளில் Personal Loan வட்டி விகிதம் 12% முதல் 25% வரை இருக்கும். இது குறைவான லோனாக இல்லாமல், அதிக வட்டி விகிதத்துடன் வருகிறது. FD Loan-ல், உங்கள் Fixed Deposit-ஐ அடமானமாக வைத்து, அதில் இருந்து 90-95% வரை கடன் பெறலாம். FD Loan வட்டி விகிதம், FDக்கு கிடைக்கும் வட்டிக்கு கூடுதலாக 1% முதல் 2% வரை மட்டுமே இருக்கும்.உதாரணமாக, SBI வங்கியில் 5-வருட FDக்கு 6.50% வட்டி கிடைக்கிறது. அதே FD-க்கு எதிராகக் கடன் வாங்கினால், 7.50% முதல் 8.50% வரை வட்டி வசூலிக்கப்படும். Personal Loan-களை விட இது குறைவான வட்டி விகிதத்தைக் கொண்டுள்ளது, மேலும் Processing Fee கிடையாது.
Top Equity Mutual Funds -நீங்கள் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை மாதங்களில் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை SIP (Systematic Investment Plan) திட்டம் மூலம் பார்க்கலாம். முதலீடு என்பது தற்போதைய காலத்தில் முக்கியமானது, ஆனால் எந்த முறையில் முதலீடு செய்கிறோம் என்பதே முக்கியம்.நீண்ட கால சேமிப்பிற்கு Equity Mutual Funds மிகவும் சிறந்த முதலீடு வாய்ப்பாகும். இங்கு சிறிய தொகையைக் கூட முதலீடு செய்தால், கூட்டு வட்டி (compound interest) மூலம் நீண்ட காலத்தில் பெரிய தொகையை சேமிக்க முடியும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் கிடைக்கும் வருமானம், ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளை விட அதிகம்.
SBI Bank Home Loan Interest -ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் (SBI) ரூ.45 லட்சம் வீட்டு கடன் வாங்கினால், 20 வருடத்திற்கு மாத EMI எவ்வளவு ஆகும் என்பதை பார்க்கலாம். இன்றும் வீடு வாங்குவது பல மக்களின் கனவாக இருக்கிறது.குறிப்பாக மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு வீடு வாங்குவதோ அல்லது வீடு கட்டுவதோமிகப் பெரிய கனவாகவே இருக்கிறது.இந்நிலையில், SBI போன்ற வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி EMI-களை செலுத்தும் முடிவு பெரும்பாலும் வாழ்க்கையின் முக்கியமான நீண்ட கால திட்டமாக மாறிவிடுகிறது.
Which Bank Is Best For Fixed Deposit In Tamil -நாம் வாழும் இக்காலத்தில் பணம் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.முதலீட்டு திட்டங்களில் பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) என்பது அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.இதனை டெர்ம் டெபாசிட் (Term Deposit) என்றும் அழைக்கலாம். பங்குச்சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளுக்குப் பதிலாக, அபாயங்கள் குறைவாக இருப்பதால் பிக்சட் டெபாசிட்கள் மிகவும் பிரபலமாக உள்ளது.மேலும், பல்வேறு வங்கிகள் 3 முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை முதலீட்டு காலத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றன.எந்தவொரு முதலீட்டில் ஈடுபடுவதற்கு முன், வெவ்வேறு வங்கிகள் வழங்கும் நிலையான சேமிப்பு கணக்குகளில் (FD) வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்ப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் மூலம், அந்த வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்களை நீங்கள் பார்த்து நல்லதாக தேர்வு செய்ய முடியும்.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பிக்சட் டெபாசிட் (FD) முதலீடுகளுக்கு 3% முதல் 7% வரை வட்டி கொடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்கு 50 பேசிக் பாயிண்டுகள் (bps) கூடுதலாக வழங்கப்படுகின்றது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு 6.80% வட்டி விகிதத்தை வழங்குகிறது.மேலும், 2 முதல் 3 ஆண்டு காலம் கொண்ட FD-க்களுக்கு 7% வட்டி விகிதத்தை கொடுக்கிறது.பஞ்சாப் நேஷனல் பேங்க்: (இவை ரூ. 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு) பஞ்சாப் நேஷனல் பேங்க் பிக்சட் டெபாசிட்களில் 3.50% முதல் 7.50% வரை வட்டி வழங்குகிறது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் FD-க்களுக்கு, வழக்கமான முதலீட்டாளர்களுக்கு 6.75% வட்டி விகிதம் உள்ளது. மூத்த குடிமக்கள் ஒரு வருடத் திட்டத்தில் 7.25% வட்டி விகிதத்தைப் பெற முடியும்.
Bank Minimum Balance -ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கை வைத்திருப்பது அவசியமாகிவிட்டது. இது உங்கள் நிதிகளை நிர்வகிப்பதில் பல பயன்களை வழங்குகிறது. பணத்தைச் சேமிப்பதும், மீண்டும் எடுத்துக்கொள்ளுவதும் மிகவும் எளிதாக இருக்கும். இதனால், பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட வங்கி சம்பந்தமான வேலைகளை இதன் மூலம் மேற்கொள்கின்றனர்.நாட்டில் ஆன்லைன் கட்டணங்கள் மற்றும் UPI வசதி அறிமுகம் ஆன பிறகு, அதன் பயன்பாடு மேலும் அதிகரித்துள்ளது. ஆனால், சேமிப்புக் கணக்குகளுக்கு வருமான வரித்துறையால் சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதைக் உங்களுக்குத் தெரியுமா?நீங்கள் எந்தவொரு வங்கியிலும் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைச் சேமிக்கவும், எடுக்கவும் முடியும். இது தவிர, வங்கியுடன் பல நன்மைகள் உங்களுக்கு கிடைக்கின்றன. ஆனால், இதற்கான சில வரம்புகளும் உள்ளன. சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்யலாம் என்பதைக் பார்க்கலாம்.
SBI 3 Year FD Interest Rate -இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமாக திகழும் எஸ்பிஐ, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்படுகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கடன், அடமானம், சேமிப்பு போன்ற தேவைகளுக்காக இந்த வங்கியை நாடி வருகின்றனர்.நாட்டின் மிகப்பெரிய வங்கியாக திகழும் எஸ்பிஐ, 'சூப்பர் ஹிட்' என்ற புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை பணத்தை முதலீடு செய்யலாம். காசோலை முடிவில், முதலீட்டுக்காரர்கள் வட்டி தொகையுடன் சேர்த்து முழு அசலையும் பெறுவார்கள்.
Best Monthly Saving Scheme -இந்தியர்களுக்குப் பிடித்த முதலீட்டு வாய்ப்புகளில் SIP (Systematic Investment Plan) மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் பணத்தைச் சேமிப்பது மிக அவசியமான ஒன்று. எவ்வளவு ரூபாய் சம்பாதித்தாலும், சேமிப்பு இல்லையென்றால் எதிர்காலத்தில் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். இதனால், ஓய்வுக்குப் பிறகு நிம்மதியான வாழ்க்கையை உறுதிசெய்ய சேமிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் விரைவான முறையில் சுலபமான முதலீடு செய்ய வேண்டும் என்ற குழப்பம் நம்மில் பலரிடமும் இருந்து வருகிறது.இந்நிலையில், சாமானிய மக்கள் பெரும்பாலும் வங்கி சேமிப்புகள், LIC அல்லது தபால் துறை திட்டங்களில் முதலீடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கையில் SIP என்ற சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.மேலும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான மிகச் சிறந்த எளிய வழி SIP திட்டம் ஆகும்.மேலும், தினம் 10 ரூபாய் சேமித்து மாதம் 300 ரூபாயாக முதலீடு செய்து வந்தால், ஒவ்வொரு ஆண்டும் 10% உயர்வு பெற முடியும்.அதேபோல், 30 ஆண்டுகளில் 45 லட்சம் ரூபாய் சேமிக்கக் கூடிய வாய்ப்பு SIP மூலம் நிச்சயம் கிடைக்கும். மேலும், குறைந்த முதலீட்டிலும் அதிக பலனை SIP திட்டத்தின் மூலம் பெறலாம்.
Sukanya Samriddhi Yojana In Tamil -பெண் குழந்தைகளின் எதிர்கால நலனைப் பாதுகாக்கும் வகையில், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், ஒன்றிய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது, கல்வி மற்றும் திருமண செலவுகளைச் சேமிக்க உதவும் சிறந்த முதலீட்டு திட்டமாக உள்ளது. இந்த திட்டத்தில், பெண் குழந்தை 10 வயது எட்டும் வரை கணக்கு திறக்க இயலும், மேலும் ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். 8.2% வட்டி விகிதத்தில், 15 ஆண்டுகளில் மொத்தமாக ரூ. 46 லட்சம் வரை பெற்று வரலாம். வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு விவரங்களை பற்றி பார்க்கலாம்,- குறைந்தபட்ச முதலீடு: ரூ.250- அதிகபட்ச முதலீடு: ரூ.1.5 லட்சம்- வட்டி விகிதம்: 8.2% 15 ஆண்டுகளில், மாதம் 5,000 ரூபாய் முதலீடு செய்து வந்தால், 27.92 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும். 1 லட்சம் ரூபாய் வருடாந்திர முதலீடு செய்தால், 46.53 லட்சம் பெறலாம்.சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், வரி விலக்கும் வழங்குவதால், பெண் குழந்தைகள் பெற்றோருக்கான சிறந்த முதலீட்டுத் திட்டமாக இது உருவாகியுள்ளது.
Credit Card Uses In Tamil -கிரெடிட் கார்டுகள் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், சரியான கார்டை தேர்வு செய்வதில் குழப்பம் நிச்சயம் ஏற்படக்கூடும். உங்களுடைய செலவுத்திட்டம் மற்றும் நிதி தேவைகளுக்கு ஏற்ற கிரெடிட் கார்டை தேர்வு செய்வது பல நன்மைகளைத் தரும். வட்டி விகிதம் அதிகமாக இருந்தாலும், சரியான கார்டைத் தேர்ந்தெடுப்பது நிதி மேலாண்மையில் பெரிய உதவியாக இருக்கும்.சரியான கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது எப்படி?1. செலவுகளுக்கு ஏற்ற கார்டு உங்கள் முக்கிய செலவுகள் எதுவோ அதன்படி கார்டுகளைத் தேர்வு செய்யுங்கள். மளிகை, பயணம், உணவு போன்றவற்றில் கேஷ்பேக் அல்லது ரிவார்டு நன்மைகள் கிடைக்கும் கார்டுகளை எடுத்துக்கொள்வது நல்லது. 2. சிலருக்கு கேஷ்பேக் அதிக நன்மையளிக்கலாம், மற்றவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள். உங்களுக்குத் தேவையான நன்மையை அடிப்படையாகக் கொண்டு கார்டு தேர்வு செய்யுங்கள்.3.வருடாந்திர கட்டணங்கள்கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் மற்றும் சேரும் கட்டணம் இருக்கும். இந்த கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்களை முன்னிலைப்படுத்தி உங்களுக்கு ஏற்றதைத் தேர்வு செய்யுங்கள்.4.சிறப்புச் சலுகைகள்: பல கார்டுகள் ஷாப்பிங், பயணம் போன்றவைகளில் சிறப்புச் சலுகைகளை வழங்குகின்றன. உங்களுக்கு தேவையான சலுகைகள் என்னவோ, அதற்கு ஏற்ப கார்டுகளை எடுத்துக்கொள்வது நல்லது5. வெல்கம் போனஸ் ரிவார்டு பாயிண்டுகள், கேஷ்பேக், வவுச்சர்கள் போன்ற வடிவில் வெல்கம் போனஸ் வழங்கும் கார்டுகளைத் தேர்வு செய்வது கூடுதல் நன்மையை தரும். இந்த 5 விஷயங்களை நன்றாகப் புரிந்து கொண்டு உங்களுக்கேற்ற கிரெடிட் கார்டைத் தேர்வு செய்வது, உங்களுடைய நிதி மேலாண்மையில் சிறந்த முடிவுகளை உருவாக்கும்.
Mudra Loan Details In Tamil -2015ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்களுக்கு அடமானம் இல்லாமல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.தகுதியானவர்கள், சிறு வணிகத் திட்டத்துடன் இந்த கடனை பெற முடியும். முத்ரா நிறுவனம் நேரடியாக கடன் வழங்காது, ஆனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன்கள் வழங்க உதவுகிறது. சுருக்கமாக, வங்கிகள் இந்த திட்டத்தின் கீழ் தொழில்களுக்கு கடன் அளிக்க, அதற்கான நிதியைக் கொடுக்கிறது.முத்ரா திட்டத்தின் கீழ், மூன்று வகையான கடன்கள் வழங்கப்படுகின்றன:1.ஷிஷு – ரூ.50,000 வரை2.கிஷோர் – ரூ.50,000 - ரூ.5 லட்சம் வரை3.தருண் – ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரைஇவை, சிறு வணிகங்கள் தங்கள் வளர்ச்சியைத் தொடங்கவும், விரிவாக்கவும் உதவும். யாரெல்லாம் முத்ரா கடன் பெறலாம்?சிறு அளவிலான தொழில் முனைவோர், தயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், உணவகங்கள், காய்கறி, பழவியாபாரிகள், மற்றும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் போன்ற தொழில்களுக்கு முத்ரா கடன் கிடைக்கிறது. முத்ரா கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 24 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும், மற்றும் வணிகம் குறைந்தது 3 ஆண்டுகளாக இயங்கியிருக்க வேண்டும். மேலும், முந்தைய கடனை திருப்பிச் செலுத்தாத நிலைத் தடையில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.முத்ரா கடனுக்கு விண்ணப்பம் செய்யும் முறை1. www.udyamimitra.in என்ற வலைதளத்திற்கு சென்று, 'Apply Now' என்பதைக் கிளிக் செய்யவும்.2. புதிய தொழில்முனைவோர், அல்லது சுயதொழில் செய்பவர் எனத் தேர்வு செய்யவும்.3. தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, OTP மூலம் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும்.
2000 Rupees Note News In Tamil -ரிசர்வ் வங்கி சமீபத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின்படி, பொதுமக்களின் கைவசம் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளின் நிலையைப் பற்றிய விவரத்தை வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு மே 19 அன்று, ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன்படி, அந்த நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க நேரம் வழங்கப்பட்டது.சமீபத்திய தகவலின் படி, தற்போது ரூ.7,261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே இன்னும் மக்களின் புழக்கத்தில் இருக்கிறது.என்று இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.ரூ.2,000 நோட்டுகள், 2016ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பணமதிப்பிழப்பிற்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், 2023 மே 19ஆம் தேதி, ரிசர்வ் வங்கி அவற்றை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது.இந்நிலையில்,அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் மொத்த மதிப்பு ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்தது.ஜூலை 1, 2023 அன்று, 97.87% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.அதற்கான மதிப்பு ரூ.7,581 கோடி ஆகும்.ஆகஸ்ட் 30, 2023 வரை, பொதுமக்களிடம் ரூ .7,261 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் மீதம் உள்ளன.இதன் மூலம், மொத்தத்தில் 97.96% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Home Loan Details -தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களை டிஜிட்டல் மயமாக்கியுள்ள நிலையில், மக்கள் ரூ.75 லட்சம் வரை வீட்டுக்கடன் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது. ‘கூட்டுறவு’ செயலியின் மூலம், இனி கூட்டுறவுத்துறையின் அனைத்து சேவைகளையும் மக்கள் டிஜிட்டல் வழியில் மிகவும் எளிமையாக பயன்படுத்தலாம். இந்த செயலியின் மூலம், பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை கூட்டுறவு சங்கங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கொடுக்கிறது.மேலும், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் கடன் பெற இணையவழியில் விண்ணப்பிக்கவும், தேவையான தகவல்களை பெறவும் ‘கூட்டுறவு’ செயலி உதவியாக இருக்கும்.
Selvamagal Semippu Thittam -மத்திய அரசு தபால் நிலைய சிறு சேமிப்பு திட்ட விதிகளை மாற்றி அமைத்து வருகிறது. முறைகேடாக திறக்கப்பட்ட கணக்குகளை சரிசெய்யும் விதிகள் புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது, மேலும் இந்த புதிய விதிகள் வருகிறன்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.இந்நிலையில், நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் கீழ், சிறு சேமிப்புத் திட்டத்தின் புதிதாக 6 விதிகளை வெளியிடப்பட்டுள்ளது.6 புதிய விதிகள் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.1.NSS 87 கணக்கு: ஏப்ரல் 2, 1990க்கு முன்பு கணக்கு தொடங்கப்பட்டு இருந்தால், முதல் கணக்கிற்கு நடைமுறையில் உள்ள திட்ட விகிதம் பொருந்தும். இரண்டாவது கணக்கில் இருப்பு வைப்புத் தொகைக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு விகிதங்களில் வட்டி கிடைக்கும்.2. ஏப்ரல் 2, 1990க்குப் பிறகு தொடங்கப்பட்ட கணக்கு:முதல் கணக்கிற்கு பழைய விகிதம் பொருந்தும், தற்போதுள்ள POSA விகிதங்கள் இரண்டாம் கணக்கிற்கு பொருந்தும். மூன்றாவது மற்றும் கூடுதல் கணக்குகளுக்கு வட்டி கிடையாது, அசல் தொகை மட்டுமே திருப்பிக் கொடுப்படும்.3. பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF):மைனர் பெயரில் திறக்கப்பட்ட கணக்கு, மைனர் 18 வயதை அடையும் வரை அவர்ளுக்கு POSA வட்டி கிடைக்கும், அதன் பிறகு PPF விகிதம் பொருந்தும்.4. பல PPF கணக்குகள்:இதில், வருடாந்திர வரம்பிற்குள் இருக்கும் டெபாசிட் மட்டும் வட்டி பெறும், அதிகப்படியான தொகை 0 சதவீத வட்டியுடன் திருப்பித் தரப்படும்.5.என்ஆர்ஐகள் மற்றும் PPF கணக்குகள்:செப்டம்பர் 30, 2024 வரை POSA வட்டி கிடைக்கும், அதற்கு பிறகு 0 சதவீத வட்டி வழங்கப்படும்.PPF கணக்கு வைத்திருக்கும் என்ஆர்ஐ-க்கள் குடியிருப்பு விவரங்களை வழங்க தேவையில்லை.6.சுகன்யா சம்ருத்தி கணக்கு:தாத்தா, பாட்டி கணக்கை தொடங்கியிருந்தால், அது உயிரியல் பெற்றோருக்கு மாற்றப்பட வேண்டும். திட்ட வழிகாட்டுதல்களை மீறி தவறான வழிகளில் திறக்கப்பட்ட கூடுதல் கணக்குகள் மூடப்படும்.மேலும், இந்த விதிகள் திட்டத்தினை முறையாகச் செயல்படுத்துவதற்கும், முறைகேடுகளை தவிர்கவும் உருவாக்கப்பட்டுள்ளன.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Low Interest Car Loan Bank- இன்றைய காலகட்டத்தில், இரண்டு சக்கர வாகனத்தை விட கார் வாங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.கார் வாங்குவதற்கு கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் கார் வாங்க நினைபவர்களுக்கு எளிமையான முறையில் லோன் கிடைக்கிறது.நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், வங்கி சாரா நிதி நிறுவனங்களும் கார் கடன்களை வழங்கி வருகின்றது. மேலும், குறைந்த வட்டியில் கார் கடன்களை வழங்கும் வங்கிகளின் விவரங்களை பார்க்கலாம்.கார் கடன்களை வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் வங்கியை தேர்வு செய்வது உங்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
Post Office Time Deposit Scheme - சேமிப்பு என்பது நமது வாழ்வில் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டது. அனைவரும் இனசரி அவர்களின் தேவைக்கு செலவு செய்வததை தவிர மற்ற பணத்தை சேமித்து வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்க்கும் இது ஒரு நல்ல திட்டமாக இருக்கும். குழந்தைகளின் எதிர்கால தேவைகளுக்காக , ஒரு மொத்த தொகையை முதலீடு செய்ய விரும்புவோருக்கு, தபால் அலுவலகத்தின் டெர்ம் டெபாசிட் திட்டம் என்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் வங்கிகளுடன் ஒப்பிடும்போது ,3 மற்றும் 5 ஆண்டு FD களில் சிறந்த வட்டியினைபெற முடியும்.இந்திய தபால் நிலையத்தின் கால அவகாச டெபாசிட் (Post Office Time Deposit) என்பது உங்கள் பணத்திற்கு பாதுகாப்பான மற்றும் நிச்சயமான திருப்பீடு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்ட முதலீட்டு திட்டம். இது உங்கள் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் அடகு வைத்திருக்கும் திட்டமாகும்.இத்திட்டத்தின் வட்டி விகிதம்களை பார்ப்போம், 1 ஆண்டு காலத்திற்கு: 6.9% வட்டியும், 2 ஆண்டு காலத்திற்கு: 7.0% வட்டியும், 3 ஆண்டு காலத்திற்கு: 7.0% வட்டியும், 5 ஆண்டு காலத்திற்கு: 7.5% வட்டியும், இதன் வட்டி கிகிதங்கள் அனைத்தும் இந்திய ரிசரவ் வங்கிக்கு கீழ் உட்பட்டது. இத்திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 செய்யலாம். இத்திட்டத்தின் அதிகபட்ச முதலீட்டு வரம்பு கிடையாது, எனவே உங்கள் தேவைக்கு ஏற்ப முதலீடு செய்து கொள்ளலாம்.இத்திட்டத்தின் முதலீட்டு காலம்..1 ஆண்டு, 2 ஆண்டு, 3 ஆண்டு, 5 ஆண்டு என பல்வேறு கால அவகாசங்களுக்கு முதலீடு செய்ய முடியும். 5 ஆண்டுகள் முதல் திட்டத்தில் முதலீடு செய்தால், அது Section 80C வரிவிலக்கிற்கும் தகுதி பெறும்.இத்திட்டத்தின் வட்டி கணக்கிடும் முறை, இந்த திட்டத்தில் வட்டி வருடாந்திர அடிப்படையில் கணக்கிடப்படும்.ஆனால், அடிப்படை வட்டி கால அவகாசத்தின் முடிவில் மட்டும் வழங்கப்படும்.
RBI Gold Bond Scheme -இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 30, 2015 அன்று சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் மக்கள் சந்தையை விட குறைந்த விலையில் தங்கம் வாங்கும் வாய்ப்பைப் பெற்றனர். தற்போது, இந்த திட்டத்தை அரசாங்கம் முடிக்கலாம் என்ரூ முடிவு செய்துள்ளது. அதற்கான இறுதி முடிவு செப்டம்பர் 2024 இல் எடுக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.2024 வரும் செப்டம்பரில், ரிசர்வ் வங்கியின் கடன் பெறும் காலண்டர் கூட்டத்தில், இந்தத் திட்டத்தின் எதிர்காலம் விவாதிக்கப்படும் என்று அறிக்கை சொல்லப்படுகிறது. தங்கப் பத்திரத் திட்டத்தைத் தொடர்வது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம், ஏனெனில் இது நிதி திரட்டல் மற்றும் தங்கத்தின் தேவையை குறைப்பதற்கான அரசின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும்.2024 பட்ஜெட்டில், தங்க இறக்குமதி வரி 15% ல் இருந்து 6% ஆக குறைத்தது. இதனால் தான் தங்கத்தின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், முதிர்ச்சியடைந்த பத்திரங்களில் குறைவான வருமானம் கிடைத்ததால், முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.எனவும், இதனால் திட்டத்தை முடிப்பது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கலாம் என்ற செய்தி பரவியிருந்தாலும், அதிகாரிகள் இதை மறுத்துள்ளார்கள்.மேலும், SGB திட்டத்தில் வருமானம் இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
How To Apply Pan Card Online In Tamil - இனி, நீங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் 2 மணி நேரத்தில் டிஜிட்டல் பான் கார்டைப் சுலபமாக பெற முடியும்! விண்ணப்பிக்கும் முறை மிகவும் எளிதானது. இந்தியாவில் முக்கியமான அடையாள ஆவணங்களாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருக்கிறது. வருமான வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமின்றி, சிறுவர்களின் பெயரில் சேமிப்பு திட்டங்களை தொடங்குவதற்கும் பான் கார்டு தேவையானதாக இருந்து வருகிறது.பான் கார்டின் தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து பரிமாணங்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாத நிலையில், நீங்கள் அருகிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் 2 மணி நேரத்தில் டிஜிட்டல் பான் கார்டைப் பெறலாம். இந்த சேவையைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.PAN கார்டு பெறுவதற்கான தேவையான ஆவணங்கள்:1. ஆதார் கார்டு மற்றும் அதற்குப் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர்.2. வாக்காளர் அடையாள அட்டை, மின்சாரம், குடிநீர், கேஸ் பில்கள், ஓட்டுநர் உரிமம், அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ்.
Post Office Monthly Income Scheme In Tamil -பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் மாத வருமானம் கிடைக்க வேண்டும் என்றும் நினைக்கும் நபர்களுக்காகவே தபால் நிலையத்தில் புதிய திட்டம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.அந்த திட்டத்தின் பெயர் மாதாந்திர வருமான திட்டம் , அதாவது(MIS-Monthly Income Scheme) இதன் மூலம் நீங்கள் ஒரு முறை முதலீடு செய்தால்,மாதம் மாதம் வருமானம் பெற முடியும்.இந்த திட்டத்தில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் மற்றும் எப்படி இதைஒ பயன்படுத்துவது?இதன் பயன்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.பலரும் சந்தையுடன் தொடர்புடைய சேமிப்பு திட்டங்கள் அதிக ரிட்டன்களை கொடுத்தாலும், குறைவான ரிட்டன்களை வழங்கும் நிலையான வருமான திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.மேலும், பெரும்பாலானோர் முதலீடுகளில் இருந்து வழக்கமான மாத வருமானம் பெறுவதற்கே விரும்புகிறார்கள்.
Mudra Loan Details In Tamil -பிரதான் மந்திரி முத்ரா யோஜனா , MUDRA என்பது ( Micro Units Development and Refinance Agency ) ஆகும். இந்த திட்டம் 2015-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. முத்ரா திட்டத்தில் ரூபாய்.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கி வந்த மத்திய அரசு.இப்பொழுது அதன் மதிப்பை ரூபாய். 20 லட்சமாக அதிகப்படுத்தி இருக்கிறது. முத்ரா லோன் என்பது சுய தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்து செய்யப்படும் தொழில்களுக்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை மேலும் விரிவுபடுத்துபவதற்கும், இந்த லோன் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிறு தொழில் முனைவோருக்கான முதலீடு அல்லது கடை, வியாபார கடைகள் தொடங்குதல் அல்லது கைத்தறி மற்றும் கைத்தொழில் வளர்ச்சி மற்றும் வாகனம் வாங்குதல் (ஆட்டோ, மினி வான், சிறிய லாரி).