• India

சோடா தயாரிப்பில்...கலக்கும் மிசோரம் தொழில் முனைவோர்கள்...எப்படி உருவானது இந்த ஐடியா...?

Mizoram Local Soda Startup Story

By Ramesh

Published on:  2025-01-08 12:46:37  |    45

Mizoram Local Soda Startup Story - பொதுவாக வட கிழக்கு பகுதிகளில் ஒரு தொழில் துவங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, சரியான வசதிகள், முன்னேற்றம் இல்லாத பகுதிகள், மூலப் பொருட்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்கள், இது போக முக்கியமாக சந்தை மதிப்பு என இவ்வளவு இடையூறுகளை கடந்தால் தான் வட கிழக்கு பிராந்தியத்தில் தொழில் என்பது செய்ய முடியும்.

ஆனால் இத்தனை இடையூறுகளையும் கடந்து, மிசோராமை பூர்வீகமாகக் கொண்ட சோமாவி கியாங்டே மற்றும் ஃபெலிப் ரோட்ரிக்ஸ் என்ற இணை Tui Bon Naturals என்ற நிறுவனத்தை தோற்றுவித்து, அதன் மூலம் இயற்கையான முறையில் ‘லோக்கல்’ என்ற பெயரில் சோடாக்களை தயாரித்து சந்தைப்படுத்தி வந்தது, அதாவது இவர்கள் மிசோரத்தில் விளையும் பழங்களை இவர்களது சோடாக்களுக்கு மூலப் பொருள்களாக பயன்படுத்திக் கொண்டனர்.



வெளியில் இருந்தோ, வெளி மாநிலங்களில் இருந்தோ மூலப் பொருள்களை கொண்டு வருவது தானே சிரமம், மிசோரத்திலேயே விளையும் பழங்களை பயன்படுத்துவோம் என, இவர்கள் அங்கு விளையும் போமெலோ, ரோசெல், ஆரஞ்சு மற்றும் டிராகன்ஃப்ரூட் என இந்த பழங்களின் டேஸ்ட்டில் இயற்கையான சோடாக்களை தயாரித்து முதற்கட்டமாக மிசோரத்தில் மட்டும் சந்தைப்படுத்தி வந்தனர்.

நாளடைவில் அதன் ருசி மக்களுக்கு நாக்கில் ஒட்டவே, வட கிழக்கு பிராந்தியங்களான நாகலாந்து, ஷில்லாங், குவாஹாதி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவியது, தற்போது மெட்ரோ நகரங்களான டெல்லி, பெங்களுரு, மும்பை உள்ளிட்ட பகுதிகள் வரை சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது, மிசோரத்தின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் கம்பெனியாக தற்போது Tui Bon Naturals உருவெடுத்து இருக்கிறது.

" 2021 யில் சிறு துளியென தொடங்கப்பட்ட Tui Bon Naturals யின் நிகர சொத்து மதிப்பு தற்போது 10 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது, எந்த ஒரு மார்க்கெட்டிங் வசதிகளும் பெரிதளவில் இல்லாமல் சோமாவி கியாங்டே மற்றும் ஃபெலிப் ரோட்ரிக்ஸ் அவர்களது ஐடியாவில் சாதித்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது, இது மற்ற வட கிழக்கு பிராந்தியங்களையும் தொழில் முனைவில் ஊக்கப்படுத்தும் என்பதில் ஐயமில்லை "