Digvijay Singh: The Young Indian Entrepreneur - பொதுவாக அனைவருக்குமே ஏதாவது ஒரு தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருக்கும், ஆனால் ஏதாவது ஒரு விடயத்தில் முடங்கி கிடப்போம், அது முதலீடாக இருக்கலாம், இல்லையேல் வேறு ஏதும் இன்னல்களாக இருக்கலாம், ஆனால் 16 வயதில் தொழில் ஆசை கொண்டு 20 வயதில் அவருக்கு இருந்த அனைத்து இன்னல்களையும் கடந்து தொழில் அதிபர் ஆகி இருக்கிறார் திக் விஜய் சிங்.
இது எப்படி முதலில் ஆரம்பமானது என்பதை அறிந்து நாம் கொஞ்சம் கொரோனோ காலத்திற்கு செல்ல வேண்டும், 2019-21 தேசம் முழுக்க கொரோனோ அலை வீசிக் கொண்டு இருந்த காலம், மக்கள் அதிகமாக இணையத்தை பயன்படுத்திய காலமும் அது தான், பொழுது போக்கிற்காக இணையத்தை பயன்படுத்திக் கொண்டு இருந்தபோது அவருக்கு சாக்லேட் தயாரிக்கும் வீடியோ கண்ணில் பட்டு இருக்கிறது.
தொடர்ந்து சாக்லேட் தயாரிப்பு குறித்த வீடியோவாக பார்த்து இருக்கிறார், அந்த சமயத்தில் அவரது அப்பாவும் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் ஏதோ விழா என்று சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார்கள் என்று வீட்டில் வந்து கொடுத்து இருக்கிறார், அப்போது முளைத்தது தான் அந்த சாக்லேட் தொழில் ஆர்வம், பெரும் முதலீட்டிற்கு வசதி இல்லை முதலில் கொஞ்சமாக முதலீடு போட்டு பழங்களை கொண்டு சாக்லேட்டை தயாரிக்கிறார்,
பின்னர் ஆர்டர்களுக்காக ஒரு சில நிறுவனங்களை ஏறி இறங்குகிறார், திக் விஜயின் சாக்லேட்டை சாப்பிட்டு பார்த்து விட்டு ஒரு கார் விற்கும் நிறுவனம் ஒரு 1000 சாக்லேட்டுகள் முதல் ஆர்டரை கொடுக்கிறது, அன்று ஆரம்பித்த ஆர்டர் இன்று டெல்லி, ஜெய்ப்பூர், ஹரியானா, மஹாராஸ்டிரா என பல மாநிலங்களில் ‘Saraam' என்ற பெயரில் சாக்லேட்டுகளை சந்தைப்படுத்தி வருகிறார்.
" தற்போது அவருக்கு வயது 20, இந்தியாவின் இளமையான கோடீஸ்வரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார், முயற்சியும், உழைப்பும் இருந்தால் 20 வயதிலும் கூட கோடீஸ்வரராக ஆகலாம் என்பதற்கு திக் விஜய் சிங் ஒரு சான்றாக இருக்கிறார் "