Tilak Mehta 'Paper N Parcels' Success Story - திலக் மேத்தா, இவர் இந்தியாவின் இளம் தொழில் முனைவோராக அறியப்படுகிறார், இவருக்கு அப்போது 13 வயது இருக்கும், பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார், எப்போதும் போல அது படிப்பதற்காக விடுமுறை விட்ட நாள், சிறு குழந்தைகள் விடுமுறை விட்டால் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு செல்வோமே, அது போல திலக் மேத்தாவும் தனது மாமா வீட்டிற்கு அந்த விடுமுறை நாளில் சென்றார்.
விடுமுறை முடிந்ததும் எக்ஸாம் என்பதால் படிப்பதற்காக கையில் புத்தகத்தை எடுத்துச் சென்று இருக்கிறார் திலக் மேத்தா, விடுமுறை முடிந்தது, திலக் மேத்தா வீட்டிற்கு திரும்புகிறார், ஆனால் ஒரு சிக்கல், தான் படிக்க எடுத்து போன புத்தகத்தை தனது மாமா வீட்டிலேயே வைத்து விட்டு தனது வீட்டிற்கு வந்து விடுகிறார், எக்ஸாம்க்கு படிக்க புத்தகம் தேவைப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் கொரியரில் பணத்தை அதிகமாக கட்டியும் கூட அதே நாளில் திலக் மேத்தாவால் அந்த புத்தகத்தை பெற முடியவில்லை, அப்போது தான் யோசிக்கிறார், ’ஏன் ஒரே நாளில் டெலிவரி நம் கைக்கு வரவில்லை, நாம் அவ்வாறு ஒரே நாளில் டெலிவரி செய்யும் வகையில் ஒரு கொரியர் சர்வீஸ் துவங்கினால் என்ன?’ என அந்த சிறுவன் யோசிக்கிறான், தனது பெற்றோரின் சப்போர்ட் உடன் 2018 யில் Paper N Parcel என்ற பெயரில் துவங்கியும் விடுகிறான்.
மும்பையில் வேலைக்கு செல்பவர்களுக்கு வீட்டில் இருந்து ப்ரஷ் ஆக உணவை எடுத்து வர 'டப்பாவாலா' என்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது, சைக்கிள்,ட்ரெயின் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி அவர்கள் உணவுகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துச் செல்வர், தனது கொரியர் சர்வீஸ்களுக்கு அந்த டப்பாவாலாவை பயன்படுத்திக் கொண்டு அதே நாளில் பிக் அப், அதே நாளில் டெலிவரி என ஒரு கொரியர் அமைப்பை கொண்டு வந்தார்.
மும்பை பெருநகரத்திற்குள் Paper N Parcel பிரபலம் அடைந்தது, நிறைய கொரியர்கள் வர ஆரம்பித்தன, அஞ்சலகத்தை விட குறைவாக கொரியர் சேவைகளுக்கு பணம் வசூலித்ததால் Paper N Parcel யை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகம் ஆகினர், 2018 யில் ஆரம்பித்த நிறுவனம் 2021 -யிற்குள் 100 கோடி அளவில் வருமானத்தை ஈட்டியது, மாதத்திற்கு திலக் மேத்தா 2 கோடி அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்.
" தற்போது கப்பல், விமான சேவைகளின் மூலமும் கொரியர் சேவைகளை வழங்கி வருகிறார், வளர்ந்து வருகிறார், இந்த வெற்றியின் மூலம், ஒரு தொழில் முனைவோருக்கு, ஐடியா தான் மூலதனம், வயது தடையில்லை என இரண்டு பாடங்களை நமக்கு உணர்த்துகிறார் திலக் மேத்தா "