SLR Energy : Cow Dung To CNG - மாட்டுச்சாணத்தை மட்க செய்து அதில் இருந்து CNG தயாரித்து சந்தைப்படுத்தி வரும் கடலூர் இளைஞர் விக்னேஸ்வரன் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
SLR Energy : Cow Dung To CNG - இயற்கை நமக்கு பல்வேறு வரங்களை கொடுத்து இருக்கிறது, ஆனால் இங்கு ஒரு சில தீரும் வரங்களும் இருக்கின்றன, அதில் முக்கியமாக ஒன்றை சொல்ல வேண்டுமானால் எரிபொருள், பொதுவாக கச்சா எண்ணெயில் இருந்து தான் டீசல் பெட்ரோல் அனைத்தும் கிடைக்கிறது, இந்த கச்சா எண்ணெய் என்பது கிட்டத்தட்ட பூமியை உறிஞ்சி எடுக்கப்படும் ஒரு வளம் தான்.
என்று தீரும் என்றே தெரியாத ஒரு வளம் தான், சரி அதற்கு மாற்றாக தான் மின்சார வாகனங்கள் இருக்கிறதே என்றால், பெரும்பாலும் அனல் மின் நிலையங்கள் மூலம் தான் நமக்கு மின்சாரம் கிடைக்கிறது, அந்த வகையில் நிலக்கரியும் ஒரு தீரும் வளம் தான், அந்த வகையில் இதற்கெல்லாம் ஒரு மாற்று சக்தி தான் CNG, இயற்கையாகவே இந்த CNG யை உருவாக்க முடியும் என்பது கூடுதல் பிளஸ்.
அந்த வகையில் கடலூரை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற இளைஞன், மாட்டுச்சாணத்தை மொத்தமாக கொள்முதல் செய்து அதை முறையாக மட்க வைத்து, பிளாண்டுகள் மூலம் CNG யாக மாற்றி சப்ளை செய்து வருகிறார், பொதுவாக 1 டன் மாட்டு சாணத்தில் 30 கிலோ வரை CNG எடுக்கிறாராம், அப்படி என்றால் 970 கிலோ கழிவா என்றால் அது தான் இல்லை, அதையும் இயற்கை உரமாக மாற்றி சந்தைப்படுத்துகிறார்.
இந்தியாவிலேயே இயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்தும் மாநிலம் தமிழகம் தான் என்னும் போது, இங்கு இயற்கை உரமும் தேவைப்படுகிறது, எரிபொருளும் தேவைப்படுகிறது என்னும் போது இவரது அசத்தலான இந்த ஐடியாவை இன்னும் முதலீடு செய்து தமிழகம் முழுக்க விரிவு படுத்தலாம், கடலூரை சேர்ந்த இந்த விக்னேஸ்வரன், அதானி, அம்பானியின் நிறுவனத்திற்கும் CNG சப்ளை செய்கிறாராம்.
" பொதுவாக இந்த தொழிலில் இருக்கும் சிக்கல் என்பது மாட்டு சாணங்களை கொள்முதல் செய்வது தான், அதற்கும் தீர்வுகள் இருக்கிறது, ஒரு மாட்டுப்பண்ணை வைத்து ஒரு 1000 மாடுகளை வளர்த்தால் அதற்கும் பஞ்சம் இல்லை, பெரிய நிறுவனங்கள் ஏதும் முதலீடு செய்தால் அதற்கும் தீர்வு கிடைத்திடும் என்கிறார் விக்னேஸ்வரன் "