• India
```

கிருஷ்ணா யாதவ்...வெறும் 3000 ரூபாய் முதலீட்டில் ஊறுகாய் தயாரித்து...வருடம் 5 கோடி வருமானம் தரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி...?

Homemaker To Pickle Queen

By Ramesh

Published on:  2025-02-11 09:56:09  |    142

Homemaker To Pickle Queen - கையில் வெறும் 3000 ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு ஊறுகாய் தயாரிப்பில் ஈடுபட்டு வருடம் 5 கோடி வருமானம் தரும் சாம்ராஜ்யத்தை கிருஷ்ணா யாதவ் உருவாக்கியது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிருஷ்ணா யாதவ், உத்தரபிரதேசம் மாநிலத்தில் தவுலத்பூரை சேர்ந்தவர், கணவர் கையில் உள்ள முதலீட்டை எல்லாம் போட்டு தொழில் ஒன்றை ஆரம்பித்து, அது அதள பாதாளத்திற்கு செல்லவே குடும்பத்தால் மீள முடியாத சூழல் ஏற்பட்டது, அப்போது கையில் வெறும் 500 ரூபாய் மட்டுமே இருந்து இருக்கிறது, வீட்டில் இருக்கும் அத்துனை சாமான்களையும் எடுத்து டெல்லிக்கு மூவ் ஆகினர்.

அங்கு இருந்து கொண்டும் அவர்களால் பெரிதாக ஏதும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது, இதனால் சம்பாத்யம் ஏதும் இல்லாமல் வறுமையின் உச்சத்திற்கு சென்றன்ர், சரி எதையாவது செய்வோம் என்று கிருஷ்ணா யாதவ், கிருஷி விக்யான் கேந்திரா திட்டத்தின் மூலம் கொஞ்ச நாளுக்கு தொழில் பயிற்சி ஒன்றை மேற்கொண்டார், 



ஒரு 3000 ரூபாய் முதலீட்டை திரட்டி ஊறுகாய் செய்து விற்கலாம் என முடிவெடுக்கிறார், முதற்கட்டமாக தான் தயாரித்த ஊறுகாயை மக்கள் அதிகமாக கூடும் தெருக்களில் வைத்து விற்பனை செய்து இருக்கிறார், ஆரம்ப காலக்கட்டங்களில் மந்தமாக சென்ற விற்பனை, ஒரு கட்டத்திற்கு பின்னர் கிருஷ்ணா யாதவ்வின் கைப்பக்குவமும், சுவையும் கை கொடுத்து இருக்கிறது.

பின்னர் வாங்கிய கொஞ்ச வாடிக்கையாளர்களும் சுவையை மையமாக கொண்டு திரும்ப திரும்ப வந்து வாங்க ஆரம்பித்தனர், கிருஷ்ணா யாதவ்வின் சுவையே அவருக்கு விளம்பரமாக மாறியது, இன்று ஸ்ரீ கிருஷ்ணா ஊறுகாய் என்ற பெயரில் 250 வகை ஊறுகாய்களை 1000 பெண்களை வேலைக்கு வைத்து வருடத்திற்கு 5 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

" பெண் தொழில் முனைவோர்கள் பலருக்கும் கிருஷ்ணா யாதவ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், உந்துதலாகவும் அமைகிறார் "