• India
```

5 இலட்சம் முதலீட்டில்...10 கோடி வரை வருமானம்...தொன்னை பிரியாணியில் கலக்கும் பெங்களுரு சகோதரிகள்...!

RNR Donne Biryani Success Story

By Ramesh

Published on:  2025-01-30 16:47:44  |    14

RNR Donne Biryani Startup Story - பெங்களுருவை மையமாக கொண்டு இயங்கி வரும் RNR Donne Biryani நிறுவனத்தின் வெற்றி பயணம் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

RNR Donne Biryani Startup Story - பொதுவாகவே இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு பாரம்பரியம் கொண்டு இருக்கும், அது உடை, மதம், கலாச்சாரத்தில் மட்டும் அல்ல உணவு வகைகளிலும் தான், அந்த வகையில் கர்நாடகாவின் பாரம்பரிய பிரியாணி வகையான தொன்னை பிரியாணியை கையில் எடுத்து அதை ஒரு தொழிலாக மாற்றி வெற்றி நடை போட்டு வரும் சகோதரிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2020 ஆம் ஆண்டு கொரோனா நாடு முழுக்க சூழ்ந்திருந்த காலக்கட்டத்தில் உணவுக்கான தேவை என்பது மிக மிக அதிகரித்தது, ஹோட்டல்களுக்கு எல்லாம் பல கட்டுப்பாடுகள் இருந்ததால் பல ஹோட்டல்களும் மூடிய நிலையில் தான் இருந்தன, அந்த சமயத்தில் தோன்றிய கிளவுட் கிச்சன் ஐடியாவை பெங்களுருவை சேர்ந்த ரம்யா & ஸ்வேதா இருவரும் 5 இலட்சம் முதலீட்டில் துவங்கினர்.



தனது பாட்டியின் கைவண்ணத்தையும், பாரம்பரிய தொன்னையையும் இணைத்து ஒரு பிரியாணியை தயார் செய்து சந்தைப்படுத்தினர், ஆரம்ப காலக்கட்டத்தில் ஒரு மாஸ்டர், இரண்டு அசிஸ்டண்ட்ஸ் இவ்வளவு தான் இவர்களது கிச்சன், இவர்களது தரம் மற்றும் சுவையே இவர்களது பிரியாணிக்கு விளம்பரம் ஆகி வாடிக்கையாளர்களையும் அதிகப்படுத்தியது.

RNR Donne Biryani என்ற இவர்களது அந்த நிறுவனம் ஆரம்பித்த 18 மாதங்களிலேயே 8 கோடி வருமானம் ஈட்டியது, தற்போது கர்நாடகா முழுக்க 14 கிளவுட் கிச்சன் இவர்களது வசம் இருக்கிறது, தற்போது 10 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருகிறார்கள், இணைய விளம்பரங்களை காட்டிலும் சுவையும் தரமுமே விளம்பரம் என்பதை நிரூபித்துக் காட்டி அதில் வென்றும் இருக்கிறார்கள் இந்த சகோதரிகள்.