Renuka Aradhya: Daily Wage To Crorepathy - ரேனுகா ஆராத்யா, கர்நாடகாவில் இருக்கும் சிறிய கிராமத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர், மிக மிக ஏழ்மையான குடும்பம், அப்பா ஒரு போதகர், பெரிதாக வருமானம் இல்லை, குழந்தைகளுக்கு மூன்று வேலை உணவு கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் பிச்சை எடுக்கும் நிலை வரை சென்று விட்டார், பின்னர் அதில் கிடைக்கும் பணத்தில் பொருள்கள் ஏதேனும் வாங்கி சந்தைகளில் விற்பார்,
ரேனுகா ஆராத்யா அவரது அப்பாவிற்கு சந்தை விற்பனைகளில் உதவி புரிந்து வந்து படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார், வீட்டின் நிலையை புரிந்து கொண்டு படிக்கும் போதே ரேனுகா ஆராத்யா தனது ஆசிரியர்கள் வீட்டிற்கு க்ளீனிங் வேலைக்கு செல்வாராம், அவரது அப்பா இறந்ததும் அவரால் படிப்பை நோக்கி செல்ல முடியவில்லை, வருமானம் பார்க்கும் வகையில் அத்துனை கூலி வேலைகளையும் தேடி சென்றார்,
க்ளீனிங் வேலை, தேங்காய் விற்பனை, செக்யூரிட்டி என இரவு பகல் பாராமல் அயராது உழைத்து குடும்பத்தின் வறுமையை கொஞ்சம் தளர்த்தினார், ஒரு கட்டத்திற்கு டிரைவிங் படிக்கிறார், அது தான் அவர் வாழ்வை மாற்றியது என்று சொல்லலாம், முதலில் வாடகைக்கு டாக்ஸி எடுத்து ஓட்டுகிறார், அயராது உழைக்கிறார், பின்னர் கொஞ்சம் கடனை வாங்கி தனது முதல் சொந்த காரை வாங்குகிறார்,
அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக உயர்ந்து டிரைவரில் இருந்து டிராவல்ஸ் என்ற நிலையை அடைகிறார், ஒரு கார் பல கார்களானது, டிரைவர் ஆராத்யா, பிரவாசி டிராவல்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஆக உருவெடுக்கிறார், இன்று அவருக்கு கீழ் ஆயிரம் வாகனங்கள் இயங்குகிறது, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர், கோடிகளுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறார்.
" வறுமை என்றுமே வறுமையாகவே இருந்து விடாது, அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் வறுமையை வருமானமாக மாற்றி, யார் வேண்டுமானாலும் கோடீஸ்வரர் ஆக ஆகமுடியும் என்பதற்கு ரேனுகா ஆராத்யா ஒரு மிகச்சிறந்த சான்று "