Renee Cosmetics: A Journey of Aashka Goradiya - நடிப்பதற்கு முழுக்கு போட்டு விட்டு தொழிலில் களம் இறங்கி இன்று 820 கோடி காஸ்மெட்டிக்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் ஆஷ்கா கோரடியா குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹிந்தி டெலிவிஷன்களில் பிரபல நடிகையாக வலம் வந்த ஆஷ்கா கோரடியா ஒரு நாள் திடீர் என்று தனது நடிகை வாழ்க்கைக்கு மொத்தமாக முழுக்கு போட்டார், ஆனால் அந்த முழுக்கு என்பது அவர் ஒரு வேறு ஒரு பரிணாமம் எடுப்பதற்காக இருந்தது, அதுவரை நடிகையாக வலம் வந்த ஆஷ்கா கோரடியா தொழில் பக்கம் திரும்பி தன்னை தொழில்முனைவோராக காட்ட முனைந்தார்.
பொதுவாகவே அவர் நடிகையாக பணி புரிந்த போது காஸ்மெட்டிக்ஸ்க்கான மார்க்கெட் நிலவரம் குறித்து அறிந்து வைத்து இருந்தார், அது தான் அவரை தொழில் பக்கமும் திரும்ப வைத்து இருக்கிறது, அவரது ஐடியாவும் அதை நோக்கி தான் இருந்தது, ஏற்கனவே காஸ்மெட்டிக்ஸ் மார்க்கெட் குறித்த புரிதல் இருந்ததால் அவருக்கு இந்த தொழில் துவங்க எளிதாக அமைந்தது.
அவரது பிரபலமான முகமும் இவருடைய தொழிலின் யுக்திக்கு ஒரு சப்போர்ட் ஆக அமைந்தது, 2019 ஆம் ஆண்டு Renee Cosmetics என்ற பெயரில் தனது தொழிலை முன்னெடுக்கிறார், இவரது பிரபலம் அந்தஸ்து இவரது பொருள்களுக்கு விளம்பரமாக அமையவே பல நட்சத்திரங்களிடமும், வாடிக்கையாளர்களிடமும் இவரது காஸ்மெட்டிக்ஸ் ஐட்டங்கள் எளிதாக மக்களிடம் சென்றடைந்தது.
ஆனாலும் அவரை உயர்த்தியது அந்த பிரபலம் என்ற அந்தஸ்து மட்டும் அல்ல, அவரது உழைப்பும், அவர் பொருட்களை தயாரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியும், அவர் அவுட்புட்டாக கொடுத்த தரமும் தான் இன்று அவரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா என சர்வதேச அளவில் Renee Cosmetics யை உயர்த்தி இருக்கிறது, இன்று அவரது சாம்ராஜ்யத்தின் மதிப்பு 820 கோடியாக இருக்கிறது.
" தெரியாத ஒன்றை கையில் வைத்து தொழிலை சுருக்கி கொண்டே போகாமல், தெரிந்த துளியை துளி துளியாக சேர்த்தால் கடலாக விரிவு படுத்தலாம் என்பதற்கு ஆஷ்கா கோரடியா ஒரு சிறந்த சான்றாக அமைகிறார் "