• India
```

பிராஞ்சலி அவஸ்தி...7 வயதில் முதல் கோடிங் 18 வயதில் 100 சாம்ராஜ்யம்...டெக் உலகில் கலக்கும் சுட்டிப்பெண்...!

Pranjali Awasthi Success Story

By Ramesh

Published on:  2025-02-19 13:00:28  |    48

Pranjali Awasthi Success Story - 7 வயதில் முதல் கோடிங் எழுதி, 18 வயதில் ஒரு டெக் சாம்ராஜ்யத்தையே உருவாக்கி இருக்கும் ப்ராஞ்சலி அவஸ்தி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிராஞ்சலி அவஸ்தி அவருக்கு ஒரு 6 வயது இருக்கும் போது அவரது தந்தை விளையாட்டாக கோடிங் கற்றுக் கொற்று கொடுக்கிறார், அந்த குழந்தை 7 வயதில் தனது முதல் கோடிங்கை எழுதுகிறது, அவரது தந்தை அவஸ்திக்கு கோடிங்கில் ஆர்வம் இருப்பதை உணர்ந்து அவர் செய்ய நினைப்பதற்கு வழி காட்டி விடுகிறார், இந்திய வம்சாவளியான பிராஞ்சலி 11 வயதில் அமெரிக்காவிற்கு மூவ் ஆகிறார்.

13 வயதில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் சர்வதேச பல்கலைக்கழகத்தின் இயந்திர கற்றல் ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப் சேர்ந்து சிறுது காலம் தொழிநுட்ப உலகம் குறித்து தெரிந்து கொண்டார், தனது கற்றலை வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவை நோக்கி நகர்த்தினார், தனது ஆராய்வுகளை தரவுகளை மேம்படுத்தி டெல்வ்.ஏஐ (Delv.AI) என்ற ஸ்டார்ட் அப்பை துவங்கினார்.



அவரது ஸ்டார்ட் அப்பிற்கு நல்ல வரவேற்பு மார்க்கெட்டில் கிடைக்கவே முதற்கட்டமாக 3.7 கோடி வரை முதலீடு கிடைத்தது, அந்த முதலீட்டை திறம்பட பயன்படுத்தி, சந்தைகளில் இருக்கும் சவால்களை எல்லாம் எதிர்கொண்டு தற்போது 100 கோடி சாம்ராஜ்யத்தை பிராஞ்சலி அவஸ்தி உருவாக்கி இருக்கிறார், தரவுகளை ஒழுங்குபடுத்தும் இவர்களது AI க்கு தற்போது ஒரு பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது.

AI என்றாலே போட்டி நிறைந்த உலகம், அந்த போட்டியில் ஒரு 18 வயது இளம்பெண் தன்னை தக்க வைத்துக் கொண்டு ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய சாதனை தான், ஆனாலும் பிராஞ்சலி அவஸ்தி கொஞ்ச நாளுக்கு தனது படிப்பையும் தொடர ஆசைப்படுகிறார், நிறுவனத்தையும் படிப்பையும் எப்படி சமநிலையுடன் கையால போகிறார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.