Pramod Kumar Bhadani Startup History - வெறும் 2500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து, இன்று 50 கோடி சாம்ராஜ்யத்திற்கு நிறுவனர் ஆகி இருக்கும் பிரமோத் குமார் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பிரமோத் குமார் பதானி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர், தனது 14 வயது வரை பிகாரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் படித்து வந்தார், பின்னர் வீட்டின் ஏழ்மை சூழலை உணர்ந்து கொண்டு, தனது படிப்பிற்கு முழுக்கு போட்டி விட்டு அப்பாவுடன் அப்பாவின் தொழிலில் இணைந்தார், தள்ளு வண்டியில் இருவரும் இணைந்து தெரு தெருவாக லட்டுக்களை விற்று வந்தனர்,
பின்னர் ஒரு கட்டத்திற்கு பின் தனது சகோதரருடன் இணைந்து ஒரு 2500 ரூபாய் கடனை வாங்கி, தனியாக தள்ளு வண்டி ஒன்றை வாங்கி தனது லட்டுக்களை பல இடங்களுக்கு கொண்டு செல்ல முனைந்தார், அவருக்கு இப்படியே குறுகிய வட்டத்திற்குள் தொழிலை செய்ய விருப்பமில்லை, தனது லட்டுக்களை பெரிய அளவில் சந்தைப்படுத்த வேண்டும் என்ற ஆசை இருந்தது.
தினமும் 19 மணி நேரம் அயராது உழைத்து தனது லட்டின் சுவையை பீகார் முழுக்க கொண்டு சென்றார், ஒரு கட்டத்தில், வீடு வீடாய் தெரு தெருவாய் வாடிக்கையாளர்களை தேடி தேடி லட்டுக்களை சந்தைப்படுத்தி வந்த பிரமோத் குமாரையே தேடி வாடிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர், தான் ஒருவரால் இந்த சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி விட முடியாது என்பதை உணர்ந்தார் பிரமோத்.
பின்னர் தனது லட்டுக்களை ஒரு பிராண்ட் ஆக மாற்றி, பீகார் முழுக்கவும், அண்டை மாநிலங்களுக்கும் விரிவு படுத்தினார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் என அண்டை மாநிலங்களிலும் இவரது லட்டுக்கள் பிரபலமானது, பின்னர் இவர் லட்டுக்களை மட்டும் அல்லாது பேக்கரி பொருள்களையும் சந்தைப்படுத்தி தனது வருமானத்தை 50 கோடி அளவில் பெருக்கினார்.
" இன்று ஒரு லட்டு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி சந்தைப்படுத்தி வருகிறார், இந்தியாவின் மற்ற ஸ்நாக்ஸ் நிறுவனங்களான ஹல்திராம்க்கு இவர் போட்டியாக உருவெடுத்து வருகிறார் "