Patricia Narayan Success Story - பாட்ரிஷியா நாராயண் பெரிய பின்புலம் எல்லாம் இல்லை, ஒரு மிடில் கிளாஸ் பேமிலி தான், 17 வயதில் காதல் திருமணம், பெரிதாக நினைத்தது போல அந்த திருமண வாழ்க்கை அமையவில்லை, கணவர் குடிக்கு அடிமையானதால் வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கியது, இரண்டு குழந்தைகள், ஒரு வேளை உணவுக்கே திண்டாட்டம், ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்தார்.
இரண்டு குழந்தைகளை எப்படி சமாளிப்பது என தெரியாமல், ஊறுகாய் விற்பது முதல் சாலையோரக் கடை வரை அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டார், 1980 யில் வெறும் 50 பைசா இலாபத்திற்கு மெரினா பீச்சில் தின்பண்டக் கடை வைத்தார், அங்கு இருந்து கொஞ்சம் முன்னேறி ஒரு சிற்றுண்டிக் கடை வைத்தார், பாட்ரிஷியாவிற்கு உணவு செய்வதில் அவ்வளவு பிரியம் உண்டு.
அவரது செய்முறைகளும், உணவின் சுவையும், அவரின் அணுகுமுறையும் அவரது சிற்றுண்டியை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்து இன்று 100 கோடி ஸ்தாபனமாக வளர்த்து விட்டிருக்கிறது, அவரின் ஒவ்வொரு படிநிலைகளிலும் அவர் கொண்ட வலிகள் என்பது அதிகம், மகளை விபத்தில் இழந்தார், மகள் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவருடைய பெயரில் உணவு நிறுவனங்களை துவங்கினார்.
பாட்ரிஷியா தினசரி ரூ 2 இலட்சம் சம்பாதித்த போதும், தினசரி ரூ 2,000 சம்பாதித்த போதும், தினசரி 50 பைசா சம்பாதித்த போதும் அவருடைய ஆர்வம் என்பது முழுக்க முழுக்க உணவுத் தொழிலாக தான் இருந்தது, அதனால் தான் அந்த நிறுவனத்தை, அவரால் 50 பைசாவில் இருந்து 100 கோடி நிறுவனமாக மாற்ற முடிந்தது, உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் ஜீரோவில் இருந்து கூட ஹீரோ ஆக முடியும் என்பதற்கு பாட்ரிஷியா சிறந்த உதாரணம்.