• India
```

30 முதல் 40 கி.மீ நடந்தே சென்று...நாள் ஒன்றுக்கு ரூ 10000 வரை சம்பாதிக்கும்...ஒடிசாவின் அப்பள மனிதன்...!

Odisha Papad Man

By Ramesh

Published on:  2025-01-26 14:01:20  |    44

Odisha Papad Man - ஒடிசாவில் அப்பளம் விற்கும் சக்ரதர் ரானா, தன் குடும்பத்தின் சூழலை உணர்ந்து நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கி.மீ நடந்து 1000 அப்பளம் வரை விற்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Odisha Papad Man - சக்ரதர் ரானா, சாதாரண ஒரு ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர், தன் குடும்பத்தின் சூழலை கருத்தில் கொண்டு தெரு தெருவாக அப்பளங்கள் விற்று வந்தார், ஒரு பாக்கெட் நிறைய அப்பளங்களை எடுத்துக் கொண்டு அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, கூவி கூவி அனைத்து தெருக்களிலும் மூலை முடுக்கெல்லாம் நடந்தே சென்று விற்பாராம், 

ஒடிசாவின் மயூர் பாஞ்ச் என்னும் மாவட்டத்தில் இவர் கால் பதிக்காத இடமே இல்லை என்று சொல்லலாம், இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் அப்பளம் விற்கும் போது ஒரு அப்பளம் 5 பைசாவிற்கும், அதிகபட்சமாக 10 பைசாவிற்கும் விற்று இருக்கிறார், கிட்டத்தட்ட 50 வருடங்களாக அப்பளம் விற்று வரும் இந்த அப்பள மனிதர் தற்போது அவரது அப்பளங்களை 10 ரூபாய்க்கு விற்கிறாராம்.



ஒரு நாள் ஒன்றுக்கு 30 முதல் 40 கி.மீ வரை நடந்தே சென்று அப்பளங்களை கூவி கூவி விற்பாராம், இவரை அந்த மாவட்டத்தில் தெரியாதவரே இருக்க முடியாதாம், தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேல் அப்பளம் விற்று வருவதால் அங்கு இருப்பவர்கள் அனைவரும் இவரை அப்பள மனிதன் என்றே அழைப்பார்களாம், அது மட்டும் அல்லாது இவரது குணத்திற்கும் இவர் அங்கு பெயர் போனவராக இருக்கிறார்.

நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 அப்பளங்கள் வரை இவர் விற்று வருகிறாராம், 1000 அப்பளங்களின் விற்பனை என்பது அவ்வளவு எளிதானது எல்லாம் இல்லை, இவர் நடந்தே அணுகும் தெருக்களின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 80 களை தாண்டுமாம், வெள்ளை சட்டை, அரை ட்ரவுசர்ஸ், தலையில் அப்பளம் என ஒடிசாவிற்கு சென்றால் இவரை எளிதாக கண்டு பிடித்து விட முடியும்.

" ஒரு நாளைக்கு ரூ 10,000 சம்பாதிப்பது என்பது எல்லோருக்கும் பெரிதாக படலாம், ஆனால் இந்த அப்பள மனிதன் அதை தன் உழைப்பால் தினம் தினம் நிகழ்த்திக் காட்டுகிறார் என்றால் அந்த உழைப்பை நிச்சயம் பாராட்டி தானே ஆக வேண்டும் "