Food Fantasy Startup Story - ட்ரக்கில் ஹோட்டல் வைத்து மாதம் ரூ 70,000 வரை வருமானம் பார்க்கும் சகோதரன் மற்றும் சகோதரி குறித்து பார்க்கலாம்.
நாசிக்கை சேர்ந்த சகோதரன் மற்றும் சகோதரி, நிஷா மற்றும் பூஷன் ஜாதவ், இவர்கள் சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள், நிஷா ஒரு MBA பட்டதாரி, பூஷன் ஜாதவ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர், பெரிதாக குடும்பத்தை இயக்கும் அளவுக்கு இவர்களது வேலை இவர்களுக்கு வருமானம் ஈட்டு தரவில்லை, நிஷா ஏதாவது தொழில் ஆரம்பிக்கலாம் என முடிவெடுக்கிறார்.
பொதுவாக இந்தியாவை பொறுத்தமட்டில் உணவு மற்றும் ஸ்நாக்ஸ்களுக்கு என்று ஒரு மிகப்பெரிய சந்தை இருக்கிறது, சரியாக முதலீடு செய்து சரியான தரத்தில் உணவை கொண்டு சேர்த்தால் வாடிக்கையாளர்கள் நம்மை இறுக பற்றிக் கொண்டு நம் முன்னேற்றத்திற்கு அவர்களே வழி விடுவார்கள், நிஷாவிற்கு தோன்றியதும் அந்த ஐடியா தான்.
சகோதரன் பூஷன் ஜாதவ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர் என்பதால் நிஷாவிற்கு இந்த தொழில் ஆரம்பித்திட அது இன்னும் இலகுவாக அமைந்தது, இருவரும் இணைந்து ட்ரக்கில் The Food Fantasy என்ற பெயரில் ஒரு நகரும் ஹோட்டல் அமைக்கலாம் என முடிவெடுக்கின்றனர், பீட்சா, மோமோஸ், ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளை சுட சுட வாடிக்கையாளர்களின் பிளேட்டில் கொண்டு சேர்ப்பது இவர்களது ஐடியா.
கிட்டத்தட்ட ஒரு 4 மாதத்திலேயே இவர்களது ஹோட்டல் பிக் அப் ஆக ஆரம்பித்தது, வாடிக்கையாளர்கள் இவர்களது புட் ட்ரக்கை தேடி வர ஆரம்பித்தனர், சகோதரன் மற்றும் சகோதரியால் துவங்கப்பட்ட இந்த புட் ட்ரக் ஹோட்டல் தற்போது நாசிக்கில் மாதம் ரூ 70,000 வரை வருமானம் பார்த்து வருகிறது, இன்னும் தங்கள் புட் ட்ரக்கை பல்வேறு இடங்களுக்கு விரிவு படுத்த நிஷா மற்றும் பூஷன் முயற்சி செய்து வருகின்றனர்.