• India
```

வருடத்திற்கு 2 கோடி வரை வருமானம்...வங்கி வேலையை துறந்து...வெல்லம் தொழிலில் கலக்கும் நவ்னூர் கவுர்...!

Jaggercane Success Story

By Ramesh

Published on:  2025-01-19 03:16:13  |    196

Navnoor Kaur Startup Story - வங்கி வேலையை விட்டு வெல்லம் தொழிலில் கலக்கும் நவ்னூர் கவுர் அவர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Navnoor Kaur Startup Story - நவ்னூர் கவுர் ஒரு பெண் தொழில் முனைவோர் மட்டும் அல்ல, அவர் அவரது குடும்பத்தின் முதல் தொழில் முனைவோர், புகழ் பெற்ற IMT Ghaziabad யில் இளங்கலை பட்டத்தை முடிந்த நவ்னூர் கவுர், ஒரு MBA பட்டதாரியும் கூட, படித்து முடித்ததுமே Kotak வங்கியில் நல்ல பொசிசனில், நல்ல சம்பளத்தில் ஒரு பணியில் அமர்கிறார் கவுர், ஆனால் அது அவருக்கு திருப்தி தரவில்லை.

அவருக்கு ஏதாவது தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் இருந்து கொண்டே இருந்திருக்கிறது, அதுவும் உணவு சம்பந்தமாக ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்பது தான், அப்போது தான் யோசிக்கிறார் அவரது குடும்பத்தில் அனைவருக்குமே நீரிழிவு நோய் இருந்து இருக்கிறது, ஏன் என்று யோசித்த போது சேர்க்கும் இனிப்பு வகைகளில் ஏற்பட்ட மாற்றம் என அறிகிறார்.



ஒரு காலத்தில் இனிப்பிற்காக வெல்லம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது அதற்கு மாறுதலாக வந்து இருக்கும் சர்க்கரைக்கு இந்த நீரிழிவு நோயில் பெரும் பங்கு இருப்பதை உணர்கிறார், சரி பாரம்பரிய வெல்லத்தை மீட்டெடுப்போம் என முடிவெடுத்து முதலில் வெல்லத்தை வீட்டில் இருந்தே சந்தைப்படுத்தினார், ஆனால் களத்தில் இறங்கி பணி புரிய வேண்டி இருந்தது.

அதனால் வேலையை விட்டு முழு மூச்சாய் களத்தில் இறங்கினார், விலை அதிகம், என்பதை மட்டுமே யோசித்த பல கடைக்காரர்களும் அவரின் வெல்லத்தை நிராகரித்தனர், இருந்தாலும் தொடர்ந்து களத்தில் போராடி ஒரு குறிப்பிட்ட விற்பனையை அடைந்தார், பின்னர் தனது சேமிப்பில் இருந்த 5 இலட்சத்தை முதலீடாக போட்டு தனியாக ஒரு பிளாண்ட் அமைத்து அதில் இருந்து கெமிக்கல் ப்ரீ வெல்லம் தயாரித்தார்.

" இன்று தேசம் முழுக்க சந்தைப்படுத்திகிறார், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார், 22 மாவட்டங்களுக்கு இவரது தயாரிப்பு சென்றடைகிறது, வருடத்திற்கு 2 கோடி வரை வெல்லத்தை சந்தைப்படுத்துவதன் மூலம் சம்பாதிக்கிறார், ரிஸ்க் என்பது தான் தொழிலின் முதல் மூலதனம் என்பதை நப்னூர் நிரூபித்து அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார் "