Murugan Idli Shop Success Story - மதுரையில் செயல்பட்டு வந்த ஒரு சிறிய காபி நிலையம், சென்னை, சிங்கப்பூர் என விரிவடைந்தது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Murugan Idli Shop Success Story - முருகன் இட்லி கடை, சென்னையின் மூலை முடுக்குகள் எல்லாம் இருக்கும் இந்த இட்லி கடையை பற்றி அறியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள், உணவு பிரியர்கள் எல்லோரும் பிரியாணி, புரோட்டோவை நோக்கி செல்லும் போது, ஒருவர் தனது அசத்தலான இட்லி படைப்புகளால், அந்த உணவு பிரியர்களை இட்லியை நோக்கி வர வைத்தார், அவர் தான் முருகன் இட்லி கடையின் உரிமையாளர் மனோகரன்.
பொதுவாக இட்லி தோசை என்றாலே தமிழக மக்களுக்கு அலர்ஜி தான், காரணம் அம்மாக்கள் ஒரு வாரத்திற்கு ஒரு முறை மாவை அரைத்து வைத்து, காலை தோசை, இரவு இட்லி என அந்த வாரம் முழுக்க ஒட்டி விடுவார்கள், கொஞ்சம் உணவை மாற்ற தான் செய்யுங்களேன் என்றால் காலையில் இட்லியை சுட்டு, இரவு தோசையை சுட்டு தருவார்கள், இதில் இருந்து விடுதலை பெற தான் பலரும் பிரியாணியை நாடுகின்றனர்.
ஆனால் அத்தகைய வாடிக்கையாளர்களையும் இட்லி பக்கம் திரும்பி பாக்க வைத்தது முருகன் இட்லி கடை தான், 45 வருடங்களாக மனோகரன் அவர்களின் தந்தையும் தாயாரும் முருகன் காபி நிலையம் என்ற பெயரில் ஒரு சிறிய காபி கடையை மதுரையில் நடத்தி வந்தனர், பின்னர் பலரும் இட்லி இருக்கா என கேட்கவே மனோகரனின் தாயார் காபி நிலையத்தில் இட்லியையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
அன்று மனோகரனின் தாயார் ஆரம்பித்த அந்த இட்லி அறிமுகம் தான், இன்று முருகன் இட்லி கடையாக மதுரை, சென்னை மற்றும் சிங்கப்பூர் வரை செயல்பட்டு வருகிறது, 2003 யில் சென்னையில் முதல் கடையை ஆரம்பித்த மனோகரன், இன்று சென்னையில் மட்டும் 17 கிளையை நடத்தி வருகிறார், மதுரையில் 3, சிங்கப்பூரில் 2 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
" வித விதமான இட்லிகள் தான் இவர்களின் அடையாளம், இது போக தோசை, பொங்கல் என சைவ ஹோட்டல்களில் கிடைக்கும் அனைத்துமே கிடைக்கும், இவர்களே தயாரிக்கும் இட்லி பொடிக்கு என்று தனியாக உணவு பிரியர்கள் இருக்கிறார்கள் "