Dream A Dozen Startup Story - விளையாட்டாக மேக்னா ஜெயின் ஆரம்பித்த கப் கேக் தொழில் எப்படி கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம் ஆனது எப்படி, என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேக்னா ஜெயின், கர்நாடகா மாநிலம் பெங்களுருவை சேர்ந்தவர், அவருக்கு அப்போது வயது 18 இருக்கும், கல்லூரி படிப்பை படித்துக் கொண்டு இருந்தார், கல்லூரியில் இருக்கும் கேப்டரியாவில் ஒரு முறை விளையாட்டாக கப் கேக் செய்து விற்றார், அவர் செய்து விற்ற கப் கேக் அடியும் பிடியுமா விற்பனை ஆனது, அது தான் அவரின் முதல் தொழில் வருமானம்.
அன்று அவர் ஈட்டிய வருமானம் ஒரு 650 ரூபாய் இருக்கும், ஆனால் அது தான் அவர் அவருடைய தொழிலுக்கு விதைத்த முதல் விதை, பின்னர் படித்துக் கொண்டே இருக்கும் போது வீட்டில் இருந்தே கப் கேக் ஆர்டர்கள் விழாக்களுக்கும் பிறந்தநாளுக்கும் செய்து கொடுத்தார், பின்னர் நாள்டைவில் ஆர்டர்கள் அதிகமாக வரவே ஒரு சில பெண்களை வேலைக்கு வைத்துக் கொண்டு தொழிலை மேற்கொண்டார்.
Dream a Dozen என்ற பெயரில் ஒரு பிரத்யேக இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களை உருவாக்கி அதன் மூலம் ஆர்டர்களை பெற ஆரம்பித்தார், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கிய பெண்களை வேலைக்கு வைத்துக் கொண்டு ஆர்டர்கள் மற்றும் டெலிவரிகளை கையாண்டார், இன்று ஒரு நாளுக்கு 100 ஆர்டர்களுக்கு மேல் டெலிவரி செய்கிறார்.
மாதம் 8 இலட்சம் என வருடத்திற்கு கோடிகளை நெருங்கும் வருமானம் பார்த்து வருகிறார், பல பெண் தொழில் முனைவோர்களுக்கும், பெண்களுக்கும் தொழில் ரீதியான பயிற்சிகளை இலவசமாக அளித்து வருகிறார், Tanishq நிறுவனத்தால் தேர்ந்து எடுக்கப்பட்ட இந்தியாவின் டாப் 4 இளம் பெண் வெற்றியாளர்கள் பிரிவிலும் மேக்னா ஜெயின் இடம் பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.