Manas Madhu Startup Story - ஆழப்புழாவை சேர்ந்த MBA பட்டதாரி ஒருவர் நேந்திரம் சிப்ஸ் மார்க்கெட்டிங்கில் கலக்கி வருகிறார், அவர் குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
மனாஸ் மது, ஆழப்புழாவை சேர்ந்த ஒரு மிடில் கிளாஸ் இளைஞர், கேரளா பல்கலையில் எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியியல் பட்டத்தை முடித்து விட்டு, புனேவில் தனது MBA பட்டத்தை முடித்தார், படித்து முடித்த உடனே நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் கூட அவருக்குள் ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது.
வேலை பார்த்துக் கொண்டே வார இறுதி நாட்களில் தனது தொழிலுக்கான ஐடியாவை தேடிக் கொண்டு இருந்தார், பல்வேறு ஆராய்வுகளுக்கு பின்னர் உணவு, ஸ்னேக்ஸ் பிரிவில் நல்ல மார்க்கெட்டிங் வேல்யூ இருப்பதை உணர்ந்து கொண்டு, முதலில் பலா பழத்தை வைத்து ஒரு மீட் தயாரித்து சந்தைப்படுத்தினார், ஆனால் அந்த ஐடியாவில் அவரால் வெற்றியை ஈட்ட முடியவில்லை,
காரணம் அவருக்கு சரியான சப்ளை கிடைக்கவில்லை, முதல் முயற்சியிலேயே கிடைத்த தோல்வியால் துவண்டு விடாமல் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து நேந்திரம் பழத்தில் செய்யப்படும் ஸ்னேக்ஸ் வகைகளை கையில் எடுத்தார், கேரளாவில் நேந்திரம் பழத்திற்கான சப்ளைவும் அதிகமாக இருந்ததால், இவருக்கு சப்ளை பிரச்சினை இல்லாமல் கிடைத்தது.
முதலில் தனது தயாரிப்புகளின் அறிமுகத்திற்காக தானே களத்தில் இறங்கி தனது தயாரிப்புகளை இலவசமாக கொடுத்தார், பின்னர் ஒரு சிலர் விலை கொடுத்து வாங்க முயலவே, ஆழப்புழா டு திரிசூர் வரை தயாரிப்புகள் அறிமுகத்திற்காக சென்ற மனாஸ்சுக்கு அந்த 5 நாளில் மட்டும் 1.20 இலட்சம் வருமானம் கிடைத்தது, அவ்வாறாக நிறுவனத்தையும் தயாரிப்புகளையும் விரிவு செய்தார்.
" தற்போது மாதத்திற்கு 4 டன்கள் வரை நேந்திரம் சிப்ஸ்களை சந்தைப்படுத்தி, மாதம் மூன்று கோடிக்கு மேல் வருமானம் பார்த்து வருகிறார் "