• India
```

லலிதா பாட்டில்...வெறும் 2500 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து...மும்பையில் ஒரு உணவு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய பின்னனி...!

Gharchi Aathvan Startup Story

By Ramesh

Published on:  2025-02-14 09:46:55  |    73

Gharchi Aathvan Startup Story - ரூ 2500 முதலீட்டில் ஆரம்பித்து ஒரு உணவு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிய லலிதா பாட்டில் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

லலிதா பாட்டில், இளங்கலை பிரிவில் இயற்பியல் முடித்தவர், படித்து முடித்து விட்டு தன் தொழில் ஆசைக்காக இந்த உலகில் காலடி எடுத்து வைக்கும் முன்பாகவே 20 வயதில் திருமணம் செய்து வைத்து விட்டனர், இருந்தாலும் அவருக்கு நிதி ரீதியாக தன்னை வலிமையாக்கி கொள்ள வேண்டும், தனக்கென்று ஒரு தொழில் இருக்க வேண்டும் என்ற ஆசை மனதில் இருந்து கொண்டே இருந்தது.

கேஸ் ஏஜென்சிகளை அரசு கொள்முதல் செய்ததும் கணவருக்கு அவ்வளவாக ஏஜென்சியில் வருமானம் இல்லை, லலிதா பாட்டில் ஒரு பார்மசிக்கு சென்று வேலை புரிந்து குடும்பத்திற்காக கொஞ்சம் வருமானம் ஈட்டி குடும்ப சூழ்நிலையை சரி செய்தார். அது அவருடைய தொழில் ஆசைக்கு தீனி போடவில்லை, அப்போது அவரது கைகளில் ஒரு 2500 ரூபாய் இருந்தது, 



பேச்சலர்களும், கல்லூரி மாணவர்களும் வீட்டு உணவுக்காக ஏங்குவதை உணர்ந்தார், வீட்டில் இருந்தே அவர்களை போன்றோருக்கு உணவு செய்து கொடுக்கலாம் என்ற ஐடியாவிற்கு வந்தார், 2000 ரூபாய் முதலீடு, 500 ரூபாய் விளம்பர பிட் நோட்டீஸ்க்கு என தொழிலை ஆரம்பித்தார். இவர் ஆரம்பித்த வீட்டு சமையல் மாணவர்களையும், பேச்சலர்களையும் சுவையால் வெகுவாக ஈர்த்தது, 

கையில் வருமானமும் கொஞ்சம் வர ஆரம்பித்தது, பின்னர் பிரிட்டாணியா வைத்த ஒரு ஸ்டார்ட் அப் போட்டியில் இணைந்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது மட்டும் அல்லாமல், அதில் வென்று 7 இலட்சம் பரிசாகவும் பெற்றார். அதை வைத்துக் கொண்டு Gharachi Athavan என்ற பெயரில் மும்பை தானேவில் ஹோட்டல் ஆரம்பித்து, தற்போது பல கிளைகளுடன் மாதம் 8 இலட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.

" எந்த நிலையில் இருந்து உழைத்தால் எத்தகைய நிலைக்கும் செல்லலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக லலிதா பாட்டில் விளங்குகிறார் "