Iceberg Success Story - ஐஸ்க்ரீமை இயற்கையான முறையில் தயாரித்து சந்தைப்படுத்தி வருடத்திற்கு 12 கோடி வரை வருமானம் பார்க்கும் சுஹாஸ் பி ஷெட்டி குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Iceberg Success Story - சுஹாஸ் பி ஷெட்டி அவர் சிறு வயதில் இருக்கும் போது அவரது பாட்டியும் தாத்தாவும் அவர்களுக்கு ஐஸ்க்ரீம் செய்து கொடுப்பார்களாம், அது சுஹாஸ் பி ஷெட்டிக்கு மிக மிக பிடித்து போக, ஒவ்வொரு முறையும் தாத்தா பாட்டியிடம் அந்த ஐஸ்க்ரீம் கேட்டு அடம்பிடிப்பாராம், அது தான் அவருக்கு ஐஸ் க்ரீம் மீதான முதல் ஆர்வம் என்றே சொல்லலாம்.
முதலாவதாக அவர் ஐஸ்க்ரீம் ஷாப் துவங்கும் போது, அதை எப்படி செய்ய வேண்டும் என, தனது தாத்தா பாட்டியிடம் கேட்டு தான் துவங்கினாராம், துவங்கிய முதல் நாளில் அவரின் ஷாப் வசம் 43 லிட்டர் ஐஸ்க்ரீம் இருந்து இருக்கிறது, மற்ற பிராண்டுகளை காட்டிலும் இவர் கொடுத்த வித்தியாசமான சுவை, தரமான கலவைகளால் இரண்டே நாட்களில் அந்த அனைத்தும் விற்று தீர்த்ததாம்,
துவங்கிய ஐந்தாவது நாளே விற்பனை இரண்டு மடங்கானது, ஸ்டாக்கையும் இரண்டு மடங்கு ஆக்கினார், எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் மக்களை தனது தரத்தால் சுஹாஸ் உள்ளே இழுத்தார், ஒரு கட்டத்திற்கு பின் தூய்மையான மாடு, ஆடு, கழுதைப் பாலின் மூலம் இயற்கையான முறையில் ஐஸ்க்ரீம் செய்ய ஆரம்பித்தார், சந்தையில் புது புது சுவைகளை அறிமுகப்படுத்தினார்,
இவரது ஐஸ்க்ரீமில் உபயோகிக்கப்படும் பதப்படுத்தி கூட இவர் இயற்கையான பொருளாக இருக்க வேண்டும் என விரும்புவாராம், அதற்காக இவர்கள் ஐஸ்க்ரீமின் நீண்ட கால பயன்பாட்டிற்கான கெமிக்கல்களை சேர்க்காமல், இயற்கையான கோந்துகளை பயன்படுத்துவார்களாம், இவர்களின் இந்த தனித்துவம் தான் இன்று ஐஸ்பெர்க் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்து இருக்கிறது.
" இன்று தேசம் முழுக்க 70 க்கும் மேற்பட்ட கிளைகள், வருடத்திற்கு 12 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது சுஹாஸ் பி ஷெட்டியின் ஐஸ்பெர்க் நிறுவனம், தனித்துவமும், வாடிக்கையாளர்களின் மீது அக்கறையும் இருந்தால் எந்த ஒரு தொழிலும் ஆட்டோமேட்டிக்காக முன்னேற்றம் இருக்கும் என்பதற்கு சுஹாஸ் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் "