• India
```

கீதா பட்டில்...5000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்து...4 கோடி வருமானம் தரும் ஸ்நாக்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி...?

Geeta Patil Patil Kaki Startup Story

By Ramesh

Published on:  2025-02-20 15:02:48  |    256

Patil Kaki Startup Story - வெறும் ரூ 5000 முதலீட்டில் ஆரம்பித்து 4 கோடி வருமானம் தரும் ஸ்நாக்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய கீதா பட்டில் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கீதா பட்டில், மஹாராஸ்டிராவை சேர்ந்த ஒரு மிடில் கிளாஸ் குடும்பம், கீதா தனது வீட்டில் இருக்கும் போது அம்மாவிடம் தினமும் ஏதாவது ஒரு சமையலை அல்லது தின்பண்டங்கள் செய்முறையை தனது சிறு வயதில் இருந்தே கற்றுக் கொண்டு வந்து இருக்கிறார், ஒரு கட்டத்தில் அவர் கணவர் குழந்தை என்று ஆன பிறகு குடும்பத்திற்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வருமானம் என்பது தேவைப்பட்டு இருக்கிறது.

நமக்கு தான் கொஞ்சம் சமையல் ஆர்வம் அதிகம் உண்டே, ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து அருகில் இருப்பவர்களுக்கு விற்று பார்க்கலாம் என ஒரு 5000 ரூபாய் முதலீட்டில் ஸ்நாக்ஸ் செய்து வீட்டு அருகில் இருப்பவர்களுக்கே விற்று இருக்கிறார், அவரது ஸ்நாக்ஸ் ரொம்பவும் பிடித்து போகவே தினசரி பக்கத்து வீட்டுக்காரர்கள் வீடு தேடி வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.



வீட்டில் இருந்தபடியே மாதத்திற்கு 100 ஆர்டர்கள் வரை கீதா பட்டிலால் விற்க முடிந்தது, பின்னர் அவரது மகன் ஒருவர் கீதா பட்டிலின் விற்பனைக்கு உதவிகரமாக 'Patilkaki' ஒரு பிரத்யேக இணையதளத்தையும், சமூக வலைதளங்களையும் ஓபன் செய்து கொடுத்தார், இவரது ஸ்நாக்ஸ்களுக்கு எல்லா பக்கமும் நல்ல வரவேற்பு கிடைக்கவே மெசினரிகள், ஆட்களை வைத்து நிறுவனமாக நிறுவினார்.

இன்று அவரது அந்த ஸ்நாக்ஸ் நிறுவனம் வருடத்திற்கு 4 முதல் 5 கோடி வரை வருமானம் ஈட்டி வருகிறது, அவரது Patilkaki நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு மட்டும் 10 முதல் 15 கோடி இருக்கும் என கூறப்படுகிறது, தற்போது 50 க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் அதிகபட்சமாக தினசரி ஆயிரம் ஆர்டர்கள் என வருடத்திற்கு ஒரு இலட்சம் ஆர்டர்களை நெருங்குகிறார்.

" உழைப்பும் தரமும் இருந்தால் எவ்வளவு கீழ் இருந்தாலும் எந்த உச்சத்திற்கும் செல்லலாம் என்பதற்கு கீதா பட்டில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் "