• India

Swiggy Zomato க்கு எல்லாம் முன்னோடிகள் இவர்கள் தான்...130 ஆண்டுகளாக உணவுகளை டெலிவரி செய்து வரும்...டப்பாவாலாக்கள்...!

Dabbawala History In Tamil

By Ramesh

Published on:  2024-12-23 14:12:13  |    58

Dabbawala History In Tamil - இந்தியாவில் குறிப்பாக மும்பையில் அதிமாக செயல்பட்டு வருகின்றனர் இந்த டப்பாவாலாக்கள், பொதுவாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் காலை, மதியம் என இரண்டு நேரத்திற்குமான உணவுகளை பொட்டலம் கட்டி கொண்டு போக வேண்டிய அவசியம் இருந்தது, இதனால் காலை உணவு சூடாக கிடைத்தாலும், மதிய நேரம் சூடாக உணவு சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.

இது மட்டும் அல்லாது வீட்டில் இருக்கும் மனைவியோ, அம்மாவோ காலையிலேயே எந்திரித்து இரண்டு வேலைக்குமான உணவை முன்னதாகவே செய்ய வேண்டிய நிலையும் ஏற்படும், இந்த சிரமங்களை எதிர்கொள்ள தான் கிட்டத்தட்ட 130 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒரு தீர்வை கண்டு பிடித்து இருக்கின்றன, அவர்கள் தான் இந்த டப்பாவாலாக்கள்.



பொதுவாக இவர்களது வேலை என்பது ஒருவர் அலுவலகத்தில் வேலை செய்கிறார், அவருக்கு மதிய உணவு கொண்டு செல்ல வேண்டும் என்றால், இவர்கள் நேரடியாக அந்த வீட்டிற்கே சென்று சாப்பாட்டை வாங்கிக் கொண்டு குறித்த நேரத்தில் சூடாக கொண்டு சேர்ப்பார்கள், நடந்தோ, சைக்கிளிலோ, ரயிலிலோ, தள்ளு வண்டியிலோ என ஏதாவது ஒரு பயணத்தின் மூலம் உணவு சரியான நேரத்தில் சென்றடையும்.

ஒரு டப்பாவாலாக்கள் ஒரே ஒரு கஸ்டமரை மட்டும் வைத்திருக்க மாட்டார்கள், ஒரே ஒருவர் 30 கஸ்டமர்களை கூட வைத்து இருப்பார்கள், தற்போதைய காலத்தில் ஒரு டப்பாவாலா ஒருவருக்கு உணவு டெலிவரி செய்ய மாதம் ரூ 800 முதல் 1200 வரை வாங்குகிறார்கள், என்ன தான் Swiggy, Zomato என்று உலகமே டிஜிட்டல் மையம் ஆனாலும் இன்னும் மும்பையில் டப்பாவாலாக்கள் செயல்பட்டு தான் வருகின்றனர்.

" இந்த டப்பாவாலாக்கள் தான் Swiggy, Zomato விற்கு எல்லாம் அடிப்படை என்பதும் மறுக்க முடியாத உண்மை ஆக இருக்கிறது "