Banana Murugesan Start Up Story - வாழை நாரில் கலை பொருட்கள் தயாரித்து ஏற்றுமதியில் கலக்கும் வாழை முருகேசன் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Banana Murugesan Start Up Story - வாழை முருகேசன் மதுரையை சேர்ந்த ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர், ஒரு ஏழை குடும்பம் தான், வைகை வற்றி போனதால் விவசாயத்தில் பெரிதாக அவரால் இலாபம் பார்க்க முடியவில்லை, ஒரு நாள் அப்படியே சாலையோரம் நடந்து செல்லும் போது விவசாயிகள் வாழையை வெட்டி அதில் இருக்கும் நார் கழிவுகளை எரித்துக் கொண்டு இருப்பதை உற்று நோக்குகிறார்.
நாம் ஏன் இந்த வாழை நாரை பயன்படுத்தி ஏதேனும் தயாரிக்க கூடாது என்ற சிந்தனை எழுந்து இருக்கிறது, உடனடியாக அவரது வீட்டில் இருக்கு மாட்டு கொட்டகையை தயாரிப்பு மையமாக மாற்றி அந்த வாழை நார் மூலம் கூடை செய்து பார்த்திருக்கிறார், வெற்றிகரமாக பண்ண முடிந்தது,பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வித்தியாசம் வித்தியாசமாக ட்ரை செய்தி பாத்திருக்கிறார்.
அவர் செய்த அனைத்து பொருட்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது, பின்னர் IIT பல்கலையின் மூலம் ஏற்றுமதி குறித்த விடயங்களை அறிந்து இருக்கிறார், எளிதில் மக்கும் இயற்கையான கலை பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு இருப்பதை உணர்ந்த முருகேசன் தனது ஏற்றுமதியை ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து அதிகரித்து இருக்கிறார்.
பின்னர் மதுரையில் சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தயாரிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார், அதிகமாக வேலையாட்களை பணியமர்த்தி இருக்கிறார், பின்னர் அவராக மெசின்கள் தயாரித்து நார்களில் இருந்து நூல் எடுத்து புது புது முயற்சிகளில் பல கை வண்ணங்களை தயாரித்து சந்தைப்படுத்தி இருக்கிறார், சிறிய முதலீட்டில் ஆரம்பித்து தற்போது மாதம் இலட்சங்களில் இலாபம் பார்த்து வருகிறார்.
" இவரால் இவர் மட்டும் இலாபம் அடையவில்லை, இவரால் வாழை விவசாயிகளுக்கும் ஒரு இலாபம் போய் சேருகிறது, அது தான் இவர் ஆரம்பித்த தொழிலில் கிடைத்த இன்னொரு பெரிய மூலதனம் "