Agra Mushroom Brothers - உள்கட்டமைப்பு விவசாயம் (Indoor Farming) என்பது தற்போது இந்தியாவில் பிரபலம் ஆகி வருகிறது, அதிலும் காளான் பயிரிடல் என்பது கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை அனைவரும் செய்யும் ஒரு உள்கட்டமைப்பு விவசாயமாக மாறி வருகிறது, உலகளாவிய அளவிலான சந்தைகளில் காளானுக்கான தேவையும் வருடத்திற்கு வருடம் பன்மடங்கான உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவும், காளான் விவசாயத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருவதால் இந்தியா தற்போது காளான் உற்பத்தியில் சர்வதேச அளவில் நான்காம் இடத்தில் இருக்கிறது, இந்தியாவில் காளான் உணவுக்காக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது, கடந்த 2023 யில் மட்டும் இந்தியாவின் காளான் மார்க்கெட் என்பது 1.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.
இந்த நிலையில் தான் ரிஷப் குப்தா என்னும் கணினி பொறியாளர் ஒருவர் துபாயில் பணி புரிந்து கொண்டு இருந்தார், அந்த சமயம் கொரோனோ என்னும் பெருந்தொற்று உலகம் முழுக்க படையெடுக்க துவங்கியது, வீட்டில் இருந்தே பணி புரிய நிர்ப்பந்திக்கப்பட்ட ரிஷப் சொந்த ஊருக்கு வந்து முதலில் பொழுது போக்கிற்காக சிறிதளவில் காளான் பயிரிட்டார்.
பின்னர் காளானின் சந்தை மதிப்பை உணர்ந்த ரிஷப் குப்தா தனது வீட்டின் அருகிலேயே பெரிய குடில் அமைத்து காளான் விவசாயத்தில் தீவிரமாக இறங்கினார், துபாயில் கணினி பொறியாளர் வேலையை கைவிட்டு விட்டு தனது சகோதரர் ஆயுஷ் குப்தாவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு காளான் விவசாயத்தில் முழுவதும் இறங்கினார், தொடர்ந்து தனது விற்பனை சந்தையை விரிவு படுத்தினார்,
உற்பத்தி, பேக்கிங், சந்தைப்படுத்துதல் என மூன்று பிரிவாக பிரித்து மூன்றுக்கும் தனி கவனம் செலுத்த துவங்கினார். ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக ஊழியர்களை நியமித்துக் கொண்டார், இன்று அவர் துபாயில் கணினிப் பொறியாளராகவே இருந்திருந்தால் அவரது சம்பளம் என்பது மாதத்திற்கு 2 இலட்சம் இருக்கும், இன்று அவர் தினசரி 1.5 இலட்சம் சம்பாதிக்கிறார், வருடத்திற்கு 7.5 கோடி வரை வருமானம் பார்க்கிறார்.
" எந்த ஒரு தொழிலுக்கும் முதலில் தொழில் மீதான நம்பிக்கை மற்றும் தைரியம் மிக மிக அவசியம், அந்த நம்பிக்கையும் தைரியமுமே காளான் விவசாயத்தில், இந்த குப்தா சகோதரர்களை இந்திய கோடீஸ்வரர்கள் ஆக்கி இருக்கிறது "