Civil Engineer To Red Banana Farming - புனேவில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பை முடித்தவர் அபிஜித் பாட்டில் அவர்களுக்கு, அவர் நேசித்த படிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை, அவர் நேசித்த தொழிலை செய்யலாம் என முடிவெடுத்து விவசாயத்தில் களம் இறங்கினார், என்ன பயிரிடுவது என குழம்பி பலவற்றை பயிரிட்டு இலாபமும் நட்டமும் என நிலையில்லாமல் அவருடைய விவசாயம் சென்று கொண்டு இருந்தது.
அதற்கு பின்னர் ஒரு கட்டத்தில் தன் நிலம் செவ்வாழை பயிரிடலுக்கு நன்கு உகந்தது என அறிந்த அபிஜித், தனது நிலத்தில் செவ்வாழைகளை பயிரிட துவங்கினார், முதலில் ஒரு ஏக்கரில் மட்டும் செவ்வாழைகளை பயிரிட்டு சந்தைப்படுத்தினார், பின்னர் செவ்வாழைக்கான டிமாண்ட் மார்க்கெட்களில் அதிகம் இருப்பதை உணர்ந்து 4 ஏக்கர் நிலத்திலும் செவ்வாழைகளை பயிரிட்டார்.
கிலோ ரூ 60 முதல் 90 என ரிலையன்ஸ் மார்ட், டாடா மார்ட் என இந்தியாவில் பல பிரபலமான மார்க்கெட்டுகளுக்கு எல்லாம் தனது செவ்வாழைகளை சந்தைப்படுத்தும் அளவிற்கு உயர்ந்தார், ஒரு கிலோ ரூ 60 முதல் 90 வரை விற்பனையானது, வருடத்திற்கு கிட்டத்தட்ட 60 டன்களுக்கு மேலாக செவ்வாழைகளை மார்க்கெட்களில் சந்தைப்படுத்தி வந்தார்.
அந்த வகையில் செவ்வாழை பயிரிடல் மூலம் அபிஜித் பாட்டில் வருடத்திற்கு செலவுகள் எல்லாம் போக 35 இலட்சம் வரை சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, அன்று அவர் சிவில் இஞ்சினியர் ஆகி இருந்தால் கூட இவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பாரா என்பது சந்தேகம் தான், தொடர்ந்து தனது நிலத்தையும் விரிவு படுத்தி வரும் அபிஜித் நாளை கோடீஸ்வர விவசாயி ஆனாலும் ஆகிவிடுவார் என்பதி ஐயமில்லை.