• India
```

சிறிய முதலீட்டில் அதிக வருமானம்!! வீட்டிலிருந்து பெண்கள் செய்ய கூடிய பிஸ்னஸ்..

small business ideas in home

By Dhiviyaraj

Published on:  2025-01-18 11:33:45  |    29

இன்றைய காலத்தில் விலைவாசி அதிகம் ஆனாதால் வீட்டில் இருந்து வீட்டில் இருக்கும் சிறு தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சிறிய முதலீட்டில் அதிக வருமானம் செய்ய கூடிய தொழில்களை பற்றி பார்க்கலாம் வாங்க..

மெழுகுவர்த்திகள் மற்றும் அலங்கார விளக்குகளை வீட்டில் எளிதாக தயாரிக்கலாம், இது ஒரு பயனுள்ள தொழில்முறையாகும். இதனுடன் ஊறுகாய், அப்பளம் போன்ற உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதும் சிறந்த வணிக வாய்ப்பாகும்.


வீட்டிலிருந்தபடியே பெண்கள் டைப்பிங், கம்ப்யூட்டர் டிசைனிங் போன்ற தொழில்களை மேற்கொண்டு நல்ல வருமானம் ஈட்டலாம். குறிப்பாக கிராஃபிக் டிசைனிங், வீடியோ எடிட்டிங் போன்ற திறமைகள் கொண்டவர்களுக்கு இது கூடுதல் வருவாயாக அமையும்.

மேலும், பேக்கரி தொழிலை வீட்டிலேயே தொடங்கி சாக்லேட், கேக், இனிப்பு வகைகள், முறுக்கு போன்றவை தயாரித்து விற்பனை செய்யலாம். பண்டிகை காலங்களில் அதிக லாபம் கிடைக்கும், மேலும் முழு நேர தொழிலாகவும் இதை செய்ய முடியும்.

கைவினைப் பொருட்கள் தயாரிப்பும் ஒரு சிறந்த வருமான வாய்ப்பாகும். மண்பாண்டம், அலங்கார பொருட்கள், கண்ணாடி வேலைப்பாடுகள் போன்றவற்றை குறைந்த முதலீட்டில் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் நிலையான வருமானத்தை பெறலாம்.