• India
```

பன் தயாரிப்பு தொழில்...சரியாக சந்தைப்படுத்தினால்...இலட்சங்களில் இலாபம் பார்க்கலாம்...!

Bun Making Business Ideas

By Ramesh

Published on:  2025-01-18 08:21:14  |    138

Bun Making Business Ideas - பொதுவாக பன் தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன் நீங்கள் சிறிய அளவில் செய்ய போகிறீர்களா, இல்லை பெரிய அளவில் செய்ய போகிறீர்களா என்பதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த தொழிலில் உங்களுக்கு முன் அனுபவம் இல்லை எனில் சிறிய அளவிலேயே ஆரம்பிக்கலாம், சிறிய அளவில் ஆரம்பிக்க போகிறீர்கள் என்றாலும் கூட கொஞ்சம் முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.

சுத்தீகரிக்கப்பட்ட மாவு, ஈஸ்ட், உப்பு, நீர், சர்க்கரை இவ்வளவு தான் மூலப்பொருள்கள், இவைகளை எல்லாம் மொத்த விலையில் வாங்கிக் கொள்வது நல்லது, பன்களுக்காக மாவு பிசைவது முதல், உருண்டை பிடிப்பது வரை தற்போது மெசின்கள் வந்து விட்டது, சிறிய அளவில் செய்கிறீர்கள் என்றால் கைகளிலேயே பிசைந்து உருண்டை பிடித்துக் கொள்ளலாம்.



ஒரு 50 முதல் 100 எண்ணங்கள் வைக்கும் அளவிற்கு ஓவன் மட்டும் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும், 20 KG ஓவன் என்பது ஒரு 25,000 ரூபாய் வரை இருக்கலாம், அது மட்டும் தான் உங்களுக்கு பெரிய முதலீடாக இருக்கும், மற்றபடி எல்லாம் மூலப் பொருள்களுக்கான முதலீடு தான், பன் விற்பனைக்கான சந்தை என்பது மிக மிக பெரியது, சரியாக சந்தைப்படுத்துதல் என்பது தான் பன் தயாரிப்பில் மிக மிக முக்கியம்.

பேக்கரிகள், பலசரக்கு கடைகள், மொத்த கடைகள், ஹாஸ்பிட்டல் அருகில் இருக்கும் கடைகள், பர்கர் ஷாப்கள் என பன்களை பல இடங்களில் சந்தைப்படுத்த முடியும், வித விதமான பன்களையும் தயார் செய்து சந்தைப்படுத்த முடியும், நார்மல் பன் சந்தைகளின் குறைந்த விலை என்பது ரூ 6, அதுவே பர்கர்களுக்கு பயன்படுத்தப்படும் பன் 10 ரூபாய், ஸ்வீட் பன் என்பது 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

" உங்களுக்கு சரியான சந்தைப்படுத்தும் திறன் இருந்தால் சிறிய அளவில் செய்தால் கூட மாதம் ரூ 30,000 வரை வருமானம் பார்க்க முடியும், பன் ஆயுட்காலம் என்பது 2-5 நாட்கள் தான் என்பதால் பன் தயாரிப்பில் முறையான சந்தைப்படுத்துதல் சரியான விடயமாக பார்க்கப்படுகிறது "