புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த நீங்க பலரும் பல வழிகளை முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதற்கு ஒரு ஸ்மார்ட்வாட்ச் போதும் என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீங்கள் கேட்கலாம், "எப்படி ஒரு ஸ்மார்ட்வாட்ச் புகைப்பிடிப்பதை நிறுத்த உதவும்?" என்று. இதற்கான விளக்கத்தை தற்போது பார்க்கலாம் வாங்க..
பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஸ்மார்ட்வாட்ச் மோஷன் சென்சார் மென்பொருள் மூலம் ஒருவர் புகைபிடிக்கும் போது ஏற்படும் கை அசைவுகளை கண்டறியும் ஆய்வை நடத்தியுள்ளனர்.
இதற்காக 18 நபர்களிடம் இரண்டு வாரங்களுக்கு தினசரி ஸ்மார்ட்வாட்ச் அணிய சொல்லப்பட்டது.
அதிர்வு (Vibration) வழியாக சிகரெட் பிடிப்பதை நிறுத்தும் முயற்சி ஒவ்வொரு முறை கையை தூக்கி சிகரெட் பிடிக்க முயற்சிக்கும்போது,ஸ்மார்ட்வாட்ச் அதிர்வு (vibration) கொடுக்கும். மேலும் நோட்டிபிகேஷன் மற்றும் வைப்ரேஷன் மூலம் புகைப்பிடிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தும். இதனால், அந்த நபர் தனக்கு நினைவூட்டப்பட்டு, சிகரெட் பிடிப்பதை நிறுத்த முயற்சிப்பார்.