• India

வெளிநாடுகளில் படிக்க விரும்புவோருக்கு சிங்கப்பூரின் புதிய திட்டம்!! வாங்க தெரிந்துகொள்ளலாம்..

Student accommodation in Singapore

By Dhiviyaraj

Published on:  2025-01-12 13:53:19  |    11

பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ளன என்றாலும், பலருக்கு வெளிநாடுகளில் படித்து பட்டம் பெற வேண்டும் என்ற கனவு உள்ளது. இந்த எண்ணத்தை அதிகரிக்க பல நாடுகள் வெளிநாட்டு மாணவர்களுக்கு விதவிதமான சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு மாணவர்களை அதிகம் ஈர்க்க புதிய கல்வி கொள்கையை அறிமுகம் செய்துள்ளது.

சிங்கப்பூரில் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள், இப்போது தங்களுடன் ஒரு பாதுகாவலரை அழைத்து வரலாம்.

மாணவர்கள் குடும்பத்தினருடன் இருந்தால், வீட்டினை விட்டு வெளியில் இருப்பது குறித்த கவலைகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த முடியும். இதன் மூலம் கல்வியில் குடும்ப ஆதரவு முக்கியமானது என சிங்கப்பூர் அரசு உறுதிப்படுத்தியுள்ளது.


முன்னதாக, மாணவர்களுக்கு தாய் அல்லது பாட்டி போன்ற பெண்கள் மட்டுமே பாதுகாவலராக வர அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது,  தந்தை, தாத்தா போன்ற ஆண் பாதுகாவலர்களும் மாணவர்களுடன் நீண்ட காலமாக **LTVP (Long Term Visit Pass)-க்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு பாதுகாவலர் மட்டுமே அனுமதிக்கப்படுவார் என்ற விதி நீக்கப்படவில்லை.

LTVP என்ன?

LTVP பாஸ் என்பது, மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூரில் நீண்ட காலம் தங்க அனுமதிக்கும் விசிட் பாஸ் ஆகும்.

இதற்கு விண்ணப்பிக்கும்போது, அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், 6 வாரங்களுக்குள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். சில சமயங்களில், கூடுதல் நேரம் தேவைப்படலாம். விண்ணப்ப முடிவு மின்னஞ்சல் மூலமாக அறிவிக்கப்படும். இந்த புதிய திட்டம், மாணவர்களின் கல்வி பயணத்தை சுலபமாக்கி, குடும்பத்தின் ஆதரவை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.