மத்திய பிரதேச மாநிலத்தின் குணா பகுதியில் புதிய பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்பட்டது. இதை மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், தபால் நிலையங்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டார்.
"நாடு முழுவதும் 6,000 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் பாஸ்போர்ட் சேவை மையங்களை தொடங்க வேண்டும் என்றது பிரதமர் நரேந்திர மோடியின் திட்டமாகும். இதனை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்துடன் இந்திய தபால் துறை இணைந்து செயல்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.
பாஸ்போர்ட் மையங்கள் விரைவில் 543 தொகுதிகளிலும் முன்னர் பாஸ்போர்ட் பெற பொதுமக்கள் மாவட்டத் தலைமையகங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. இனி, அதற்காக தங்கள் பாராளுமன்ற தொகுதிகளில் உடனடியாக பாஸ்போர்ட் பெறலாம். இதனால் மக்கள் நேரம், செலவு ஆகியவற்றை மிச்சப்படுத்தலாம் என்று ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.