இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் மொழி அவசியம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற கட்டயாம் இருக்கிறது.
பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளுக்குப் பிறகு, டியோலிங்கோ தனது மொழி கற்றல் தளத்தில் தமிழையும் சேர்த்துள்ளது. டியோலிங்கோ, மிகவும் பிரபலமான மொழி கற்றல் செயலியாக இருக்கிறது. தற்போது தமிழ் மொழி பேசுபவர்கள் சுலபமாக ஆங்கிலம் கற்க ஒரு புதிய அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
மொழி கற்றலுக்கான தடைகளை நீக்க, பிராந்திய மொழியில் பாடங்களை வழங்கி, அனைவருக்கும் எளிய மற்றும் இலவச கற்றல் அனுபவத்தை உருவாக்குகிறது.
டியோலிங்கோவின் கற்றல் முறை வழக்கமான பாடங்கள் போன்று இல்லை. இது விளையாட்டு முறையில், கேமிங் போன்று சுவாரஸ்யமான முறையில் கற்றலுக்குத் தூண்டுகிறது. முக்கியமாக, இந்த ஆன்லைன் பயிற்சி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது
தமிழ் பேசுபவர்களுக்கு டியோலிங்கோ வழங்கும் இந்த புதிய வசதி, ஆங்கிலம் கற்றல் அனுபவத்தை மென்மையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றுகிறது.