• India

விவசாயி ஆக மாறிய IT இளைஞர்..உயிரி உரத்தில்! வருடம் ரூ.2 கோடி வருமானம் ஈட்டும்!

Village Business Ideas In Tamil | Business News In Tamil

Village Business Ideas In Tamil -உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அக்சய் ஸ்ரீவாஸ்தவ், விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்க, மண்ணின் தரத்தை நிலைத்திருக்கச் செய்யும் உயிரி உரங்களை நவீன முறையில் உற்பத்தி செய்து வழங்கி வருகிறார். விவசாய குடும்பத்தில் பிறந்த அக்சய்க்கு விவசாய நடைமுறைகள் சிறு வயது முதலே பழக்கமாக இருந்தது. பள்ளியை முடித்து கல்லூரியில் சேர்ந்தபோது, விவசாயிகளுக்கு பயிர்களின் விளைச்சலை அதிகரிக்க உதவும் வழிகளை தேட வேண்டும் என்ற ஆர்வம் உருவானது.


2017ல் 'ஸ்டார்ட் அப் இந்தியா' நிகழ்ச்சி மூலம், IIT BHU பேராசிரியர் பி.கே.மிஸ்ராவை சந்தித்த அவர், பி.கே.மிஸ்ராவுடன் இணைந்து, பயிர்களுக்கு உதவும் உயிரி உரங்களை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். விளைச்சலையும், மண்ணின் தரத்தையும் மேம்படுத்தும் உயிரி உரங்களை தயாரிக்கத் தொடங்கினார். 2020ல் "எல்சிபி ஃபெர்டிலைசர்ஸ்" என்ற பெயரில் தனது ஆக்ரி ஸ்டார்ட் அப் நிறுவினார்.



அக்சயின் நிறுவனம் கோதுமை, அரிசி, கரும்பு உள்ளிட்ட 23 வகை பயிர்களுக்கு உயிரி உரங்களை தயாரிக்கிறது. விவசாயிகள் மண்ணின் தன்மை, காலநிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த உயிரி உரங்களை பயன்படுத்தி சிறந்த மகசூல் பெற்றுள்ளனர். 50 கிலோ உயிரி உரம் 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் சிறப்பு,லிக்னீன் அடிப்படையிலான பாலிமர்களைப் பயன்படுத்தி உரங்களை தயாரிப்பதால்,மண்ணின் ஈரத்தைப் பராமரிக்க உதவுகிறது.இதனால் பாரம்பரிய உரங்களை விட குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கிறது. 

அக்சயின் நிறுவனமானது உத்தரபிரதேசத்தைத் தவிர ராஜஸ்தான்,ஜார்கண்ட்,மகாராஷ்டிரா,பீகார்,பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கும் உயிரி உரங்களை வழங்கி வருகிறது. 2020ல் மாதம் 50 கிலோ உயிரி உரம் தயாரித்தது, இப்போது 500 கிலோவாக உயர்ந்துள்ளது.தற்போதைய நிலையில்,ஆண்டு வருமானம் 2 கோடி ரூபாயை எட்டியிருக்கும்.